சிறையில் அல்-உம்மாவின் மதமாற்ற முயற்சி: கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் மோதலாக வெடித்தது.கைதிகள் இரு பிரிவினராக பிரிந்து பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
கோயம்புத்தூர் மத்திய சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள அல்-உம்மா தீவிரவாதிகள் உள்பட பலமுஸ்லீம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அடைக்கப்பட்டுள்ள பிற மதத்தைச் சேர்ந்த கைதிகளைமுஸ்லீமாக மாற்ற அவர்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாக கடந்த சில காலமாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.
அதை நிரூபிக்கும் வகையில் பன்னீர்செல்வம் என்ற கைதி சமீபத்தில் முஸ்லீம் மதத்திற்கு மாறினார். மேலும்அல்-உம்மா கைதிகளுடன் அவருக்கு நல்ல பழக்கமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) பன்னீர் செல்வம் திடீரென்று நெற்றியில் குங்குமத்துடன் காணப்பட்டார்.இதைப் பார்த்த அஷ்ரப் என்ற அல்-உம்மா கைதி, அது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். உடனடியாககுங்குமத்தை அழி என்றும் பன்னீர்செல்வத்தை அவர் அதட்டினார்.
இதுதொடர்பாக பன்னீருக்கும் அஷ்ரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பன்னீர்ஆதரவு கைதிகளும், அல் உம்மா கைதிகளும் கைகலப்பில் இறங்கினர்.
இரு தரப்பினரும் சிறைச்சாலைக்குள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பயங்கர மோதல் நடந்தது. கையில் கிடைத்தபொருள்களைக் கொண்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். பலருக்கு மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது.
மேலும் சிலர் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து சிறையில் காவல் இருந்த போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றனர். உடனடியாகரிசர்வ் போலீசாருக்கு தகவல் பறந்தது.
சுமார் 500 பேர் கொண்ட ரிசர்வ் போலீஸ் படை சிறைச்சாலையில் நுழைந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தகைதிகள் மீது தடியடி நடத்தியது. இதன் பின்னர் தான் மோதல் முடிவுக்கு வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications