கலாமுக்கு கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு: நாராயணனுக்கே ஆதரவு
சென்னை:
ஜனாதிபதி பதவிக்கு தன்னை வேட்பாளராக தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி முடிவு செய்துள்ளதை ஏற்றுக் கொள்வதாகவிஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரசின் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அவர்வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதில் கடந்த சில நாட்களாகவே பெரும் குழப்பம் நிலவி வந்தது. மகாராஷ்டிரமாநில ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், இப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இவர்களில் ஒருவர் தான் அடுத்த ஜனாதிபதி என்ற அளவுக்கு பேச்சு அடிபட்டது.
இந் நிலையில் திங்கள்கிழமை பல திருப்பங்கள் ஏற்பட்டன. விஞ்ஞானி அப்துல் கலாமின் பெயர் இறுதியாக பரிசீலிக்கப்பட்டது.அப்துல் கலாம்தான் வேட்பாளர் என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்து இரவு அறிவித்தன.
இந்த முடிவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டது.இதில் ஜெயலலிதாவும் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டார்.
அப்துல் கலாமுக்கு ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் கட்சி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இக் கட்சிமேலும் அவகாசம் கேட்டுள்ளது. அக் கட்சி ஜனாதிபதி கே.ஆர். நாராயணனையே மீண்டும் நிறுத்தலாம் என்று கூறிவருகிறது.
அப்துல்கலாமை ஆதரிப்பது குறித்து மக்கள் முன்னணி கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இன்று சந்தித்துப் பேசி வருகின்றன. அதில்கலாமை ஆதரிக்கலாம் என சிலரும் நாராயணனைத் தான் நிறுத்த வேண்டும் என சிலரும் கூறி வருகின்றனர்.இதனால், இதுவரை தங்கள் அதிகாரப்பூர்வ முடிவை இந்தக் கட்சிகள் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே ஜனாதிபதி நாராயணன் மீண்டும் போட்டியிடுவது குறித்து இன்னும் தங்களுக்கு பதில்அளிக்கவில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது. அவரது பதில் கிடைத்த பின்னர், மக்கள் முன்னணியுடன் பேசிவிட்டுஎங்கள் முடிவை அறிவிப்போம் என காங்கிரஸ் கூறியுள்ளது.
ஆனால், கலாமை ஜனாதிபதியாக்கலாம் என்று முதலில் யோசனை கூறியதே சமாஜ்வாடி கட்சியின் தலைவர்முலாயம் சிங் தான். இவர் நேற்று பிரதமரையும் சந்தித்துப் பேசினார். இதனால் மக்கள் முன்னணியில் கம்யூனிஸ்ட்எதிர்த்தாலும் கலாமை இவர் ஆதரிப்பார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லல்லு பிரசாத் யாதவும் கலாமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், இறுதிமுடிவை காங்கிரஸ் தான் எடுக்கும் என்று கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து நாராயணன் பெயரையே வலியுறுத்தி வருகின்றன. 3 மணி நேரத்துக்கு ஒருதடவை வேட்பாளரை மாற்ற நாங்கள் ஒன்றும் பா.ஜ.க. அல்ல என கம்யூனிஸ்ட் தலைவர் பர்தன் கூறினார்.கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளதாக இன்னொரு தலவைரான சீதாராம் யெச்சூரி கூறினார்.
கலாம் நல்லவர் என்பதாலோ, விஞ்ஞானி என்பதாலோ அவரை பா.ஜ.க. நிறுத்தவில்லை. அரசியல் லாபத்தைக்கருத்தில் கொண்டு பா.ஜ.க. இதைச் செய்துள்ளது. எனவே, பாஜ.கவின் வேட்பாளரை நாங்கள் ஏன் ஆதரிக்கவேண்டும் என்று பர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே நேரத்தில், மீண்டும் போட்டியிடத் தயாரா இல்லையா என்பது குறித்து கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்கட்சிகளுக்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் இதுவரை எந்த பதிலும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சரியமடைந்தார் கலாம்: நாயுடு
இதற்கிடையே இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நான் துணைஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் பெயரை முன்மொழிந்தாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், நான் அப்துல் கலாமின் பெயரைத் தான் நான் பிரதமரிடம் கூறிக் கொண்டிருந்தேன். அவரது பெயரைபிரதமர் ஏற்றுக் கொண்டவுடன் கலாமை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.ஜனாதிபதியா? நானா? என்று முதலில் ஆச்சரியமடைந்தார், பின்னர் பதவியை ஏற்க ஒப்புக் கொண்டார் என்றார்.
காங். முடிவுக்கு காத்திருக்கிறார்:
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முடிவு தெரியவந்த பின்னர் தான் அப்துல் கலாம் வேட்பு மனு தாக்கல்செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சென்னையில் தெரிவித்தன. இந்தப் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
பாதுகாப்பு அதிகரிப்பு:
இந் நிலையில் அப்துல்கலாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவருக்கு 24 மணி நேரமும் கமாண்டோ பாதுகாப்பு தரப்பட்டு வருகிறது. இப்போது ஜனாதிபதி பதவிக்கு அவரதுபெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் வி.வி.ஐ.பி. பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் அவரது வீட்டுக்கு மிக பலத்த காவல் போடப்பட்ள்ளது. போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
கலாம் மகிழ்ச்சி:
அப்துல் கலாமின் பெயர் அடிபட்டவுடன் சென்னையில் அவரது வீட்டுக்கு விரைந்த செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது,தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். உயரிய பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தமைக்குமகிழ்ச்சியடைகிறேன். இதுதொடர்பான விரிவான விவரங்களை உங்களிடம் பின்னர் கூறுகிறேன் என்று புன்னகையுடன்தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆதரவு இல்லாமலேயே அப்துல் கலாமைதேர்ந்தெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியால் முடியும். ஆனால், இதில் ஒருமித்த கருத்துடன் அனைவரும் சேர்ந்துஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் ஆதரவுக்காக தேசிய ஜனநாயக முன்னணிகாத்துக் கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications