திமுகவினர் மீது பொய் வழக்குகள்: கருணாநிதி புகார்
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் நடந்த முறைகேடுகளை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை என்றுகூறியும் திமுகவினர் மீது போலீசார் பொய் வழக்குகள் போட்டு வருவதாகக் கூறியும் சென்னையில் வரும் 18ம்தேதி பெரும் போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
ஆற்காடு வீராசாமி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடக்கும் என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்டசமாக நடந்து கொள்கிறது. போலி சாதிச் சான்றிதழ், போலி ரேசன் கார்டுகளைக்காட்டி ஓட்டு போட வந்தவர்களை திமுகவினர் பிடித்தனர். அந்த போலி ஆவணங்களையும் தேர்தல் கமிஷனிடம்சமர்பித்தனர்.
ஆனால், அதை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை. ஜனநாயகத்தை குழு தோண்டி புதைத்து வரும்அதிமுக அரசுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் நடந்து கொள்கிறது.
ஆண்டிப்பட்ட தேர்தலிலேயே அதிமுகவினர் அராஜகத்தை ஆரம்பித்துவிட்டனர். அப்போதே அதை நாம் சுட்டிக்காட்டினோம். ஆனால், அதிமுகவினரோடு சேர்ந்து தவறு செய்த தேர்தல் அதிகாரிக்கு வக்காலத்து வாங்குவதலில்தான் தேர்தல் கமிஷன் கண்ணும் கருத்துமாக இருந்தது.
அந்தச் சம்பவம் கொடுத்த தைரியத்தில் தான் சைதாப்பேட்டையிலும் அராஜக தாண்டவம் ஆடியிருக்கின்றனர்ஆளும் கட்சியினர்.
கள்ள ஓட்டுப் போட வந்தவர்கள் குறித்தும் அராஜகம் செய்தவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கொடுக்கச் சென்ற திமுகவினர் மீது கொடுமையான சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
ஆட்சியாளர்களின் இந்த அடக்குமுறையை எதிர்த்து சென்னையில் ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது என்றுகருணாநிதி கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications