பாக். அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி
கராச்சி:
பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது குண்டுகள் ஏற்றப்பட்ட கார் மோதியது. அப்போது நடந்த பயங்கரகுண்டு வெடிப்பில் 8 பேர் இறந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். கராச்சியில் இந்தச் சம்பவம் நடந்தது.
இதையடுத்து பாகிஸ்தானில் தனது தூதரங்களை மூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வெள்ளை நிற கார் தூதரகத்தின் சுவரில் வந்து மோதியது. இதில் கார் தூள் தூளானது.அதை ஓட்டி வந்த தீவிரவாதியும் சிதறினான்.
நேற்று தான் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இஸ்லாமாபாத்தில் அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷரபுடன் பேசிவிட்டு வாஷிங்டன் திரும்பினார். இந் நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் செல்வதைத் தடுக்க வேண்டும் என பாகிஸ்தானை அமெரிக்க பல வழிகளில்நெருக்கி வருகிறது. இதனால் பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவரவாதிகள் இப்போது அந் நாட்டு அரசுக்கே எதிராக கிளம்பியுள்ளனர். முஷாரப்போடும் கட்டுப்பாடுகளை முறியடிப்பது என்ற முடிவில் உள்ளன. தங்களை கட்டுப்படுத்தும் அரசை எதிர்த்துதாக்குதல் நடத்துவோம் என இந்த அமைப்புகள் எச்சரித்திருந்தன.
இந் நிலையில் கராச்சியில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தல் இந்த தற்கொலைப் படை குண்டுவெடிப்புநடந்துள்ளது. குண்டுகள் ஏற்றப்பட்ட காருடன் வந்து அந்தத் தீவிரவாதி தூதரகத்தின் சுவரில் மோதினான்.
காரும் குண்டுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த இடத்திலேயே 8 பேர் இறந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில்சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பின் சத்தம் பல கி.மீ. தூரத்துக்குக் கேட்டது.
இந்த வெடிப்பில் தூதரக கட்டடமும் சேதமடைந்தது. தூதரகத்தின் ஜன்னல்களும் சிதறின. சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து. சாலையில் இருந்த கார்கள் தூக்கி எறியப்பட்டன. 10க்கும் மேற்பட்ட கார்கள் நொறுங்கிவிட்டன. பலமோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாயின. காயமடைந்தவர்களில் 6 பேர் அமெரிக்க தூதரக ஊழியர்கள்.
குண்டுவெடிப்புக்குப் பின் அந்த இடம் முழுவதும் உடல்கள் சிதறிக் கிடந்தன. சம்பவம் நடந்தவுடன் அமெரிக்கப்படையினர் தூதரகத்தை சுற்றி வளைத்துவிட்டனர்.
அல்-கொய்தா தீவிரவாதிகளைத் தேடி ஏற்கனவே அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானில் உள்ளனர்.
சமீப காலமாக பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. சிலமாதங்களுக்கு முன் பிரஞ்ச் தூதரக ஊழியர்களின் சர்ச் மீது நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போதைய குண்டு வெடிப்பு அல்-கொய்தா தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று கராச்சி போலீசார்கூறினர்.
இந்தச் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில் உள்ள தூதரகங்கள், அமெரிக்கன் சென்டர் ஆகியவற்றை உடனடியாகமூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications