படார்.. படார்... பாண்டுரங்கன் பதவி காலி: ஜெ. நடவடிக்கை
சென்னை:
அதிமுகவில் மீண்டும் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சமீப காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மதுசூதனனுக்கு மீண்டும் மறுவாழ்வுகிடைத்துள்ளது. சமீபத்தில் சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் நாயுடு இனத்தவரின் ஓட்டுக்களைக் கவர இவர்பெரிதளவில் உதவினார்.
இதே இனத்தைச் சேர்ந்தவரான மதுசூதனன் நாயுடு சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி ஓட்டுக்களைவளைத்தார். இதையடுத்து அவருக்கு எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பதவியை ஜெயலலிதா இப்போதுவழங்கியுள்ளார்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் முன்னாள் அமைச்சர்பாண்டுரங்கன் வசமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்துள்ளார்.
வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் பாண்டுரங்கன் ஜெயலலிதாவைப் பார்த்தால் சாமிகும்பிடுவது மாதிரி கன்னத்தில் போட்டுக் கொள்வார். சில நேரம் உணர்ச்சி வேகத்தில் கன்னத்தில் படார்.. படார்என்று அடித்துக் கொள்வார். இதன் மூலம் காலில் விழும் கலாச்சாரத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றபெருமையையும் பெற்றார்.
ஆனால், தன்னைத் தானே கன்னத்தில் அறைந்து வருத்திக் கொண்டும் கூட முதல்வர் ஜெயலலிதாவின் கருணைப்பார்வை அவருக்கு கிடைக்கவில்லை. முதலில் அமைச்சர் பதவியை இழந்த அவர் இப்போது மாவட்டச் செயலாளர்பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சமீபத்தில் வாணியம்பாடியில் வென்ற எம்.எல்.ஏ.வடிவேல் மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார்.
அதே போல ராமநாதபுரம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு காலி செய்யப்பட்டுள்ளனர். அதே போலஇளையான்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலும் அதிமுக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications