நீதிபதி அசோக்குமாரின் ஜாதி சான்றிதழ் குறித்து விசாரணை
சென்னை:
தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அசோக் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ் குறித்து விரிவான விசாரணைக்கு தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர் அசோக் குமார். திமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட வழக்குகளில் முதல்வர்ஜெயலலிதாவுக்கு எதிராக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர்.
திமுக தலைவர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து இவரது வீட்டில் தான் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார்நடந்து கொண்ட முறை குறித்தும் ஜெயலலிதா அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார் அசோக் குமார்.
இந் நிலையில் பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு விலகி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது அசோக் குமார்தர்மபுரிக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் கிறிஸ்தவ வகுப்பைச் சேர்ந்த அசோக் குமார், தாழ்த்தப்பட்டவர் என்று ஜாதிச் சான்றிதழ் வாங்கி நீதிபதி பதவிக்குவந்துள்ளதாக கூறி ஜியாவுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால் விசாரணைக்குப் பின் அவரது மனுவை டிஸ்மிஸ் செய்த உயர்நீதிமன்றம், இந்து மதத்தைச் சேராத ஒருவர் இந்து மதத்திற்குமாறுவது தவறல்ல. அவரது ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அதுகுறித்து அரசுத் தரப்பிலும்விசாரணை நடைபெறவில்லை என்று கூறி விட்டது.
இதையடுத்து ஜியாவுதீன் அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில், அசோக் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ் குறித்துவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந் நிலையில், அசோக் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு திருநெல்வேலிமாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அசோக் குமாரின் குடும்பம், அவரது உறவினர்கள், அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் தென்களம் புதூர் கிராமத்தில்உள்ளவர்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்குமாறு அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது.
இதற்கிடையே, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தப்படலாம் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 8பெயர்களில் அசோக் குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரை சென்னை உயர் நீதிமன்றம் தான சுப்ரீம்கோர்ட்டுக்கு பரிந்துரை செய்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications