6, 7, 8, 9, 11ம் வகுப்பில் பெயிலானவர்களுக்கும் உடனடி மறு தேர்வு
சென்னை:
பள்ளிகளில் 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் ஓரிரு பாடங்களில் பெயிலாகும் மாணவ-மாணவிகளும் இனிஉடனடியாக மறு தேர்வு எழுத தமிழக அரசு வசதி செய்து கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான போது அதில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள்மீண்டும் உடனடியாக மறு தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனால் மாணவ-மாணவிகளின் ஓராண்டு காலம் வீணாகாமல் உடனடியாக அவர்கள் மேற்படிப்பைத் தொடரமுடியும்.
இத்திட்டம் 10வது வகுப்பில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கும் பின்னர்அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 6, 7, 8, 9 மற்றும் 11வது வகுப்புகளில் ஓரிரு பாடங்களில் தோல்வியடையும் மாணவ-மாணவிகளும்உடனடியாக மறு தேர்வு எழுத தமிழக அரசு வசதி செய்தி கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு முதல் இம்முறை அமலுக்கு வருகிறது. அனைத்து நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் மெட்ரிகுலேசன், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கும் இந்த மறு தேர்வுமுறை பொருந்தும்.
குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் உடல்நலக் குறைவு காரணமாகவும் நன்றாகப் படிக்கக் கூடியமாணவ-மாணவிகள் கூட எதிர்பாராத விதமாகக் கடைசி நேரத்தில் ஓரிரு பாடங்களில் தேர்வில் தவற நேரிடலாம்என்றும் இதைத் தவிர்ப்பதற்காகவே இந்த உடனடி மறு தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு இவ்வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு விரைவில் மறு தேர்வுநடத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த உடனடி மறு தேர்வு ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாவதுவாரத்திலேயே நடத்தப்படும்.
ஆசிரியர் பயிற்சியில் சேர 45 சத மதிப்பெண் போதும்:
இதற்கிடையே தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேருவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண் 50சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் டூவில் 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தாலே இனி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர முடியும்என்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்றும்அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதி முதல் வழங்கப்படஉள்ளன. விண்ணப்பக் கட்டணம் ரூ.500 (தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம்ரூ.250).












Click it and Unblock the Notifications