தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவுகின்றனர்: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவது நிற்கவில்லை என்று பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தீவிரவாதிகளைப் பொறுத்தவரைபாகிஸ்தானின் செயலில் மாற்றம் தெரியவில்லை. பாகிஸ்தானை தாக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகவேஇருந்தோம்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய பின் லேடன் கும்பல் பாகிஸ்தானில் தான் பதுங்கியிருக்க வேண்டும். அவர்எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தானுக்கு நிச்சயம் தெரியும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் 70 தீவிரவாத முகாம்கள் உள்ளன என்று வாஜ்பாய் கூறியுள்ளார்.

ஆனால், கடந்த வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,தீவிரவாதிகள் ஊடுருவல் முழுமையாக நின்றுவிட்டது என்றார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், நியூஸ் வீக் பேட்டி ஒரு வாரத்துக்கு முன்தரப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

முஷாரப் திமிர் தொடர்கிறது:

அதே நியூஸ் வீக் இதழில் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபும் பேட்டியளித்துள்ளார். அதில்அவர்,

காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் நுழைவதை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதாக அமெரிக்காவுக்கு நாங்கள் எந்தஉறுதிமொழியும் தரவில்லை. எங்கள் எல்லையில் எதுவும் நடக்கவில்லை என்று அதிபர் புஷ்சிடம் கூறினேன்.

நிரந்தரமாக தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவோம் என்று உறுதிமொழி தர மாட்டோம். அது இந்தியாவின்செயலைப் பொறுத்துத் தான் அமையும். காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு நடத்த இந்தியா முன் வர வேண்டும்.

காஷ்மீரில் நடப்பது விடுதலைப் போர். அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜிடம் கூட தீவிரவாத முகாம்களைஅழிப்பது குறித்து நான் ஏதும் பேசவில்லை என்று.

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியாவின் ரா உளவு அமைப்பு தான் காரணம். ரஷ்யாவிடம் இருந்தும்மேற்கத்திய நாடுகளில் இருந்தும் இந்தியா ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருகிறது என்று கூறியுள்ளார்முஷாரப்.

அமெரிக்க, இந்திய நெருக்குதலால் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான்தள்ளப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் மக்களுக்காக இது போன்ற வீர உரை ஆற்ற வேண்டிய நிலைக்குமுஷாரப் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+