வேலூர் நகராட்சியில் நுழைந்து டெண்டர் பெட்டியை உடைத்து அதிமுகவினர் அராஜகம்
வேலூர்:
வேலூர் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த டெண்டர் பெட்டியைஉடைத்து அதிமுகவினர் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க் கட்சியினர் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
வேலூர் நகராட்சிக்குச் சொந்தமான 5 கடைகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் அதற்காகடெண்டர்கள் கோரப்பட்டன. இதற்கான பெட்டி நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
யார் அதிக விலைக்கு ஏலம் எடுக்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு இந்தக் கடைகளை ஒதுக்க நகராட்சிதிட்டமிட்டிருந்தது.
முதலில் இருந்தே ஏலத்தை எதிர்த்து வந்த அதிமுகவினர் கடைகளை நேரடியாக தங்களுக்கே ஒதுக்க வேண்டும்என்று நிர்பந்தித்தனர். ஆனால், அதையும் மீறி ஏலம் நடத்த அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இதையடுத்து நேற்று இந்தப் பெட்டியில் டெண்டர்களைப் போட வந்த பலரையும் அதிமுகவினர் நகராட்சிக்குவெளியிலேய தடுத்து நிறுத்தினர். கத்தி, அரிவாள்களைக் காட்டி மிரட்டி திருப்பி விரட்டினர்.
இந்த மிரட்டல்களையும் மீறி 17 பேர் கடைகளை ஏலம் எடுக்க போட்டியில் கலந்து கொண்டு டெண்டர்களைபெட்டியில் போட்டனர்.
இதனால் கடுப்பான அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து டெண்டர் பெட்டியில் சீலை உடைத்துஎறிந்தனர். 17 பேர் போட்ட டெண்டர்களை எடுக்க முயன்றனர்.
இதையறிந்த திமுக, தமாகா, இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவினரைமுற்றுகையிட்டனர். இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் நகராட்சி அலுவலகத்திலேயே உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.போலீசார் வந்து எதிர்க் கட்சியினரை விரட்டினர். அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்எழுந்தது.
இதையடுத்து இந்தக் கடைகளுக்கான ஏலத்தை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக நகராட்சி ஆணையர்ராஜசேகரன் நாயர் அறிவித்தார்.
டெண்டர் பெட்டி உடைக்கப்பட்டது குறித்து போலீசாரிடம் நகராட்சி புகார் தந்துள்ளது. ஆனால், அதில்அதிமுகவினர் யாருடைய பெரும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தவறு செய்த அதிமுகவினரைக் காப்பாற்ற நகராட்சி அதிகாரிகள் முயல்வதாகத் தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications