முகத்தில் தேனீக்களுடன் கார், பைக் ஓட்டும் வாலிபர்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே ஒரு கம்ப்யூட்டர் பட்டதாரி இளைஞர் தன்னுடைய முகம் முழுவதும் தேனீக்களை ஒட்டவைத்துக் கொண்டு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் விரைவாகச் சென்று சாதனை படைத்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கம்ப்யூட்டர்பட்டதாரியான இவர் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்த போதிலும்தேனீக்களை வளர்ப்பதில் நீண்ட காலமாகவே ஆர்வம் கொண்டுள்ளார்.
இந்தியத் தேனீக்கள் விரைவில் இறந்து விடும் என்பதால் அவர் இத்தாலியில் உள்ள "மெலிபேனா" என்ற வகைத்தேனீக்களைத் தற்போது வளர்த்து வருகிறார்.
இந்தத் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் தேனை எடுத்து விற்பனையும் செய்து வருகிறார் ஜெயக்குமார்.
நீண்ட காலமாகவே தேனீக்களுடன் வாழ்ந்து பழக்கப்பட்டுப் போய்விட்டதால் அவர் இந்தத் தேனீக்களைக்கொண்டே சாதனை படைக்க நினைத்தார்.
அதன்படி இந்த இத்தாலியத் தேனீக்களைத் தன்னுடைய முகத்திலேயே ஒட்ட வைத்தார் ஜெயக்குமார். அவருடையநீண்ட கால முயற்சிக்குப் பிறகு அவருடைய முகத்தைச் சுற்றிலும் தேனீக்கள் நன்றாக ஒட்டிக் கொண்டன.
முகத்தைச் சுற்றிலும் மட்டுமல்லாமல் அவருடைய கழுத்து, தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதி வரை அந்தத் தேனீக்கள் ஆக்கிரமித்தன.
இவ்வாறு தலையிலிருந்து மார்பு வரை தேனீக்களை நிரப்பிக் கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் வரைதேனீக்களின் ரீங்காரத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியவற்றை விரைவாக ஓட்டி அவர் சாதனைபடைத்தார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி மார்பு வரை தேனீக்களை ஒட்ட வைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வலம் வரும் ஜெயக்குமார், விரைவில் தன்னுடைய உடல் முழுவதும் தேனீக்களை ஒட்ட வைத்துக்கொண்டு சாதனை படைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
தேனீக்களால் தனக்கோ அல்லது தன்னால் இந்தத் தேனீக்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லைஎன்று கூறும் ஜெயக்குமாரை அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications