கும்பாபிஷேகம்: தயார் நிலையில் திருவண்ணமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி சிறப்பு ரயில்களைஇயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

26 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் இங்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை மிகச் சிறப்பாக நடத்தஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வரும் வியாழக்கிழமை இந்த விழா நடக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 70 லட்சம் செலவில் தயாரான தங்கக்கொடி மரம் நிலை நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை இதற்காக யாகசாலை பூஜைகள் தொடங்கின. 43,000 சதுரஅடியில் 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை ராஜகோபுரம் உள்ளிட்ட 18 கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.இந் நிகழ்ச்சியை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ஜெயா டிவி நேரடியாக ஒளிபரப்புகிறது.

இந்த நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயலலாம் என்ற தகவல் கிடைத்திருப்பதால் மிக பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணாமலையார் ஆலயத்தை காவல்துறையின் பாம் ஸ்குவாட் தனதுகட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது.

கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளை 500 வெடிகுண்டு நிபுணர்களும் 10க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களும்தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி நாளை இரவு சென்னையிலிருந்து விழுப்புரத்துக்கும் அங்கிருந்துதிருவண்ணாமலைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை எழுபூரில் இருந்து இந்த ரயில்விழுப்புரம் செல்லும். அங்கிருந்து காலை 4.30 மணிக்கு இன்னொரு சிறப்பு ரயில் திருவண்ணாமலைக்குப்புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+