அத்வானி துணைப் பிரதமராக வாய்ப்பு
டெல்லி:
உள்துறை அமைச்சர் அத்வானி துணைப் பிரதமராக்கப்படுவார் என் தெரிகிறது.
அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் மழை காலக் கூட்டத்தொடர் ஜூலை 15ம் தேதி துவங்கவுள்ளது.
அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றப்படும் என்று தெரிகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த பல சட்டமன்றத்தேர்தல்களிலும் தொடர் தோல்வி ஏற்பட்டதால் பல அமைச்சர்கள் மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்ப வாஜ்பாய்திட்டமிட்டுள்ளார்.
ஆனால், அவர்கள் விலக மறுத்து வருகின்றனர். இதனால் தொடர் ஆலோசனைகளில் வாஜ்பாய் ஈடுபட்டுள்ளார்.
நேற்று பிரதமரின் இல்லத்தில் மூத்த அமைச்சர்களின் கூட்டம நடந்தது. இதில் அமைச்சர்கள் அத்வானி, ஜஸ்வந்த்சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரமோத் மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் கட்சியின் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி வாஜ்பாயைச் சந்தித்துப்பேசிவிட்டுச் சென்றார்.
கட்சித் தலைவர் பதவியில் இருந்து கிருஷ்ணமூர்த்தியை நீக்கிவிட்டு அவரை அமைச்சராக்க முயற்சிகள்நடக்கின்றன. ஆனால், கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதையே கிருஷ்ணமூர்த்தி விரும்புவாதத் தெரிகிறது.
அதே நேரத்தில் அமைச்சரவையில் இடம் பிடிக்க பல மூத்த தலைவர்களும் முயன்று வருகின்றனர். தனதுகட்சிகுள்ளேயே இது போன்ற குழப்பம் உள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் பலவும் மேலும் சில அமைச்சரவைப்பதவிகளைக் கேட்கின்றனர்.
பரூக் அப்துல்லா தனக்கு அல்லது தனது மகனுக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி கேட்கிறார். ஜார்ஜ்பெர்னாண்டஸ் தனது சமதா கட்சிக்கு இன்னொரு அமைச்சர் பதவி வேண்டும் என்கிறார்.
இப்போது மத்தியில் 71 பேர் கொண்ட ஜம்போ அமைச்சரவை பதவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாற்றப்படும் அமைச்சரவையில் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி, திருநாவுக்கரசு ஆகியோருக்கும் பதவிகள்கிடைக்கலாம் என்று தெரிகிறது.
அத்வானிக்கு மேலும் முக்கியத்துவம் தரப்படவுள்ளது. சங் பரிவார் அமைப்புகள் அவருக்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும் என்று நெருக்குதல் தந்து வருகின்றன. இதனால் அவர் துணைப் பிரதமர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் தனது வேலைப்பளுவை குறைக்க முடியும் என வாஜ்பாய் நினைப்பதாகவும் பேசப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications