தமிழகத்துக்கு 3 டி.எம்.சி. நீர் தர கர்நாடகத்துக்கு வாஜ்பாய் உத்தரவு
டெல்லி:
தமிழகத்துக்கு உடனடியாக 3 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு பிரதமர் வாஜ்பாய்உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வாஜ்பாய்,
தமிழகத்தில் காவிரி டெல்டாவில் வசித்து வரும் லட்சகணக்கான விவசாயிகள் நீர் இல்லாமல் மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பிரச்சனைகளை மனதில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் உடனடியாக 3டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று கூறியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
தமிழக விவசாயிகளின் பரிதாப நிலை:
தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடிக்காக காத்திருக்கும் 15 லட்சம் விவசாயிகளின் எதிர்காலத்துடன் கர்நாடகம்விளையாடி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தனது காவிரி பாசனப் பகுதியை பல மடங்கு திட்டமிட்டுஅதிகரித்துவிட்டு நீரை அங்கு திருப்பி விட்டு வருகிறது.
தமிழகத்துக்கு தர வேண்டிய நீரையும் மண்டியா, மைசூர் மாவட்டங்களில் விரிவாக்கப்பட்டு வரும் தனது விவசாயநிலங்களுக்கு கர்நாடகம் திருப்பிவிட்டு வருகிறது.
இந் நிலையில் காவிரியில் நீர் இல்லாமல் தமிழகத்தில் பயிர்கள கருக ஆரம்பித்துவிட்டதால், சோற்றுக்குவழியில்லாமல் கூலி வேலைகள் பார்க்க ஊர்களை காலி செய்ய ஆரம்பித்துள்ள கடலூர், நாகப்பட்டிணம்,தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள்.
ஜெயலலிதா தீவிரம்:
பலமுறை கேட்டும் கர்நாடகம் நீரைத் தராததால் காவிரி நதி நீர் ஆணையத்தில் இருந்து விலகிவிட தமிழக முதல்வர்ஜெயலலிதா முடிவெடுத்தார். இந்த ஆணையத்தால் எந்தப் பயனும் இல்லை என அவர் கூறினார்.
அதே போல காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குமாறுகர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தமிழகம் முடிவெடுத்துள்ளது.
ஆனால், மழை இல்லாததால் தங்களது அணைக் கட்டுகளில் போதிய அளவு நீர் இல்லை என கர்நாடகம் கூறிவருகிறது. இதை தமிழகம் மறுத்து வருகிறது.
தமிழக, கர்நாடக முதல்வர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இப்போது கர்நாடக அணைக்கட்டுகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. அதை தங்கள் கோடைகாலத்துக்காக ரிசர்வ் வைத்துக் கொண்டு, மழை பெய்யவில்லை, இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியவில்லை என்று கர்நாடகம் பொய் சொல்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
கிருஷ்ணா மறுப்பு:
இந் நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என கர்நாடக முதல்வர் கிருஷ்ணாதிட்டவட்டமாகக் கூறினார். தன்னைச் சந்தித்த பா.ம.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள குழுவினரிடம் அவர் இதனைத்தெரிவித்தார்.
காவிரிப் பிரச்சனையால் மீண்டும் இரு மாநிலங்களும் மீண்டும் கலவரத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பதைஉணர்ந்த பிரதமர் இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன்சரன சேத்தி, நீர்வளத்துறைச் செயலாளர்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் கோரிக்கை:
கர்நாடக, தமிழக நீர் இருப்பு நிலவரம், விவசாயிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்தார். இதையடுத்துகிருஷ்ணாவுக்கு பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஆனால், பிரதமரின் இந்தக் கோரிக்கையை கர்நாடகம் ஏற்குமா என்று தெரியவில்லை.
பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி தமிழர்களை சில கன்னட அமைப்புகள் குறி வைக்கலாம்.












Click it and Unblock the Notifications