குற்றால அருவியில் பெண்களுடன் "நைட்டி" அணிந்து குளித்த வாலிபர் கைது
குற்றாலம்:
குற்றால மெயின் அருவியில் பெண்கள் பகுதியில் "நைட்டி" உடையை அணிந்து குளித்துக் கொண்டிருந்தவாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாகவே குற்றாலத்தில் சீசன் தொடங்கி அனைத்து அருவிகளிலும் தண்ணீர்பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் இங்கு அலைமோதத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (29) என்ற வாலிபரும் குற்றால சீசனை அனுபவிப்பதற்காகதன் நண்பர்களுடன் வந்திருந்தார்.
இந்த நண்பர்கள் அனைவருமே பயங்கரமான "கிளுகிளு" பேர்வழிகள். அருவியில் பெண்கள் பகுதியில் சென்றுகுளிக்க யாருக்காவது "தில்" உண்டா என்று அதில் ஒருவர் கேட்டார். உடனே "ஜொள்ளு" பார்ட்டியான கிருஷ்ணன்,தான் அதற்குத் தயார் என்று முன் வந்தார்.
உடனே குற்றாலத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் பெண்கள் அணியும் "நைட்டி" ஒன்றையும் நண்பர்களுடன்சென்று வாங்கி வந்து அணிந்து கொண்டார் கிருஷ்ணன்.
பின்னர் தலை முடியை வைத்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு துண்டைத்தலையில் போர்த்திக் கொண்டு மெயின் அருவியின் பெண்கள் குளிக்கும் பகுதியில் நுழைந்து குளிக்கஆரம்பித்தார்.
குளித்ததோடு நின்று விடாமல் அங்கிருந்த பெண்களின் கையைப் பிடித்து இழுத்தும் கட்டி அணைத்தும் தகாதமுறையில் நடந்துள்ளார். அவர்களும் "பெண் தானே" என்று நினைத்து விட்டு விட்டனர்.
இந்நிலையில் திடீரென்று உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகவே, "நான் ரெடி, குளிக்க நீங்க ரெடியா?" என்று பாடஆரம்பித்தார் கிருஷ்ணன். இதையடுத்தே அவர் ஆண் என்று பெண்களுக்குத் தெரிய வர, அவர்கள் பெரும்அதிர்ச்சியடைந்து உடனே கூக்குரல் எழுப்பினர்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த பெண் போலீசார், "நைட்டி"யுடன் குளித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனைவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
மெயின் அருவியில் ஆண்கள் பகுதிக்கும் பெண்கள் பகுதிக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் உண்டு. இந்தச்சுவரின் மேல் நின்று கொண்டு எப்போதும் ஒரு போலீசார் இதுபோன்ற "கிளுகிளு" ஆசாமிகளை லத்தியாலே"கவனிப்பது" வழக்கம்.
ஆனால் இந்த வாலிபர் "நைட்டி"யை அணிந்து கொண்டு பெண்கள் பகுதிக்கே சென்று குளித்து போலீசுக்கே"அல்வா" கொடுத்து விட்டார்.
பின்னர் அவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இது தொடர்பாக விசாரித்த நீதிபதிதட்சிணாமூர்த்தி, கிருஷ்ணனுக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார். இத்தொகையைக் கட்டவில்லை என்றால் 3 மாதம்சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணனுடைய நண்பர்கள் சேர்ந்து அபராதத் தொகையைக் கட்டி அவரை மீட்டுக் கொண்டுவந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications