பிளஸ் டூ: தொடங்கியது உடனடி மறு தேர்வு
சென்னை:
கடந்த ஆண்டு (2001-02) பிளஸ் டூ தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கானஉடனடி மறு தேர்வு இன்று தொடங்கியது.
இதுவரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் தான் இந்த மறு தேர்வுகள் நடந்துவந்தன. இதனால் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அந்த ஒரு ஆண்டு முழுவதும் விரயமாகி விடுகிறது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரு ஆண்டு முழுவதும் வீணாகிவிடுவதைத் தவிர்ப்பதற்காக, ஓரிரு பாடங்களில் தவறிய பிளஸ் டூ மாணவர்களுக்கு ஜூன் மாதத்துக்குள் உடனடிமறு தேர்வு நடத்தும் திட்டத்தை தமிழக அரசு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த ஆண்டுக்கான உடனடி மறு தேர்வு இன்று காலை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் சுமார் 42,000 மாணவர்கள் இந்த உடனடி மறு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.சென்னையில் மட்டும் 40 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
இந்த மறு தேர்வு மூலம் ஓரிரு பாடங்களில் தவறிய மாணவர்கள், இதில் தேர்வாகும் பட்சத்தில் அடுத்த ஓரிருமாதங்களிலேயே மேற்படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
வரும் ஜூலை 6ம் தேதி வரை இந்த உடனடி மறு தேர்வு நடக்கும் என்றும் அம்மாத இறுதிக்குள்ளாகவே தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்வுத் துறை இயக்குநர் பழனிவேலு தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications