விழுந்து நொறுங்கியது மிக் விமானம்: விமானி தப்பினார்

Subscribe to Oneindia Tamil

மோகா (பஞ்சாப்):

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-23 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. ஆனால்,விமானி பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார்.

ஹல்வாரா விமானப் படைத் தளத்தைச் சேர்ந்த அந்த விமானம் இன்று காலை வழக்கமாக பயிற்சியில் ஈடுபட்டது.அதனை பிளைட் லெப்டினன்ட் பரத்குமார் ஓட்டிச் சென்றார்.

விமானப் படை தளத்திலிருந்து காலை 7.30 மணிக்குக் கிளம்பியவுடனேயே என்ஜினில் தீப் பற்றிக் கொண்டது.ஆனால், அதற்குள் அந்த விமானம் மிக வேகமாக கிராமப் பகுதியின் மேல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

7.45 மணிக்கு மோகா மாவட்டத்தின் மீது பறந்தபோது விமானியை உடனே பாராசூட் மூலமாக குதிக்குமாறுஅதிகாரிகள் ஆணையிட்டனர். இதையடுத்து அவர் வெளியில் குதித்தார். காயங்களுடன் உயிர் தப்பினார்.

விமானம் தல்வாண்டி மல்கியான் என்ற கிராமத்தின் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அப்போது வயலில்நின்றிருந்த ஒரு விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடைந்து சிதறிய விமானத்தின் பாகங்கள் அவரதுவயலில் சிதறின.

உடனே அவர் தனது ஊர் பஞ்சாயத்துக்கு தகவல் தந்தார். போலீசாருக்கும் தகவல் தரப்பட்டது.

விமானம் விழுந்த இடத்துக்கு அருகிலேயே விமானி பரத்குமாரும் பாராசூட்டில் தரையிறங்கினார். அவருக்கும்உடலில் காயங்கள் ஏற்பட்டன. விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விமானத்தின் மீது பறவை மோதியதால் அல்லது என்ஜினில் கோளாறினால் தீப் பிடித்திருக்கக் கூடும் எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை மிக்-21 ரக விமானங்கள் தான் விபத்துக்குள்ளாகி வந்தன. இப்போது மிக்-23யும் விபத்தில்சிக்கியுள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+