போலீசையே மிரட்டி லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லஞ்சம் வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்கார் ஒருவர் ரயில்வே போலீஸ்காரரை விபச்சார வழக்குபோடுவேன் என்று மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணியைச் சேர்நதவர் ஞானமுத்து. இவர் ரிக்ஷாகாரர்கள் முதல் விபச்சாரிகள் வரை அனைவரையும்மிரட்டி பணம் பறித்து வந்தார். இவரது லஞ்ச லாவண்யம் அளவைக் கடந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும், தன்னை போலீஸ்காரர் என்று கொண்டு தொடர்ந்து பலரிடம் பணம்பறித்து வந்தார் ஞானமுத்து.

இவர் நேற்று முன் தினம் இரவு கடற்கரைக்குச் சென்றார்.

கடற்கரையில் ரயில்வே போலீஸ்காரராகப் பணிபுரியும் கபாலி என்பவர் தனதுஉறவுப் பெண் ஒருவரோடுஅமர்ந்திருந்தார். அந்த ஜோடியிடம் சென்ற ஞானமுத்து, தன்னை போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பின்னர் கபாலியைப் பார்த்து என்ன இவளை தள்ளிட்டு வந்தியா என்று கேட்டார். உனக்கு எவ்வளவு ரேட் என்றுஅந்தப் பெண்ணிடமும் இழிவாகப் பேசினார்.

பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால் இருவர் மீதும் விபச்சார வழக்குப் போடுவேன் என்றுமிரட்டினார். தொடர்ந்து கபாலியின் சட்டைப் பையில் கையைவிட்டு பணத்தையும் எடுத்துக் கொண்டார்.

இது தொடர்பாக கபாலி கொடுத்த புகாரின்பேரில் ஞானமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டும் திருந்தாத ஞானமுத்து போன்றவர்கள் மீண்டும் சஸ்பெண்ட் காலம் முடிந்து பணிக்குவந்தால் அது காவல்துறைக்கும் நல்லதல்ல. மக்களுக்கும் நல்லதல்ல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+