திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை:
நாளை நடைபெறவுள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகத்தை ஒட்டிபிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசாரர் பாதுகாப்புப் பணியில்நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக நகருக்குள் இன்று மாலை முதல் கார்கள், வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய பகுதிகளில் ஆட்டோக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளைதிருவண்ணாமலைக்கு இயக்கவுள்ளது. இதற்காக 9 தாற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை (வியாழக்கிழமை) காலை 9.27 மணிக்கு மேல் 10.37 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்தக் கோவிலில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விழா நடக்கிறது. இதற்காக இசையமைப்பாளர்இளையராஜா தலைமையில் திருப்பணிக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ரூ. 4 கோடி செலவில் இந்தகுடமுழுக்கை நடத்த ஏற்பாடுகளைச் செய்தது.
ஆனால், விழாவில் இளையாராஜாவின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டு ஆளும் கட்சியினரானஅதிமுகவினரின் பெயர்கள் தான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
இதை நிச்சயம் இளையராஜா கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் பலருடன் சேர்ந்துபாடுபட்ட அந்த மனிதரை ஒதுக்கிவிட்டு ஆட்சிக்கு வந்துவிட்ட ஒரே காரணத்துக்காக மாவட்ட அதிமுகபெருந்தலைகள் ஏதோ தாங்கள் தான் இந்த நிகழ்ச்சியையே நடத்துவது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 20 லட்சம் பேர் பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது. ஏற்கனவே பல லட்சம் பேர் ஊருக்குவந்துவிட்டனர். குடிநீருக்கு இந்த நகரில் எப்போதும் பஞ்சம் தான். இப்போது இத்தனை பேர் கூடியுள்ள நிலையில்அவர்களுக்கு தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் ஏந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பெரும் தண்ணீர் பஞ்சத்தில் பக்தர்கள் சிக்கியுள்ளனர்.
நகரின் அனைத்து லாட்ஜ்களும் நிரம்பிவிட்டன.
கோவிலின் நுழைவாயில்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானபோலீசாரும் தமிழக காவல்துறையின் பெரும்பாலான பாம் ஸ்குவாட் நிபுணர்களும் திருவண்ணாமலையில்குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ., அல்-உம்மா ஆகிய தீவிரவாத அமைப்புகள் இத்தனை லட்சம் பேர் கூடும் இந்த விழாவில்குண்டுவெடிப்பை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக மாநில போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீண்டநாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துவிட்டது.
இதையடுத்து அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில்முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார். அவருக்கும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications