விழுப்புரத்தில் திமுக- அதிமுகவினர் கடும் மோதல்: ஏட்டிக்கு போட்டி சாலைமறியல்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் திமுக நகராட்சித் தலைவரை அதிமுகவினர் தாக்கினர். இதையடுத்து அதிமுகவினரை திமுகவினர்தாக்கினர். இரு தரப்பினரும் நகர் மன்றத்தில் இருந்த நாற்காலிகளை வீசி எறிந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரு கட்சியினரும் சாலை மறியலிலும் ஈடுபட்டு பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினர்.
அப்போது காரில் வந்த முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியை அதிமுகவினர் சூழ்ந்து நின்று கெரோசெய்தனர்.
நேற்று மாலை விழுப்புரம் நகர்மன்றக் கூட்டம் நடந்தது. அப்போது நகராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் எலலாதீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இதையடுத்து அவரை நோக்கி அதிமுக கவுன்சிலர்கள் பாய்ந்தனர். அவரிடம் இருந்த தீர்மான நகல்களை பறிக்கமுயன்றனர். அவர் தர மறுக்கவே அவருக்கு முகத்திலும் மார்பிலும் குத்து விழுந்தது.
இதை சிறிதும் எதிர்பார்க்காத திமுக கவுன்சிலர்கள் பன்னீர்செல்வத்தை காப்பாற்ற அதிமுகவினர் மீது பாய்ந்தனர்.இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அடி- தடி ஏற்பட்டது.
சிலரது வேஷ்டிகள் உருவப்பட்டன. சில கவுன்சிலர்கள் நாற்காலிகளைத் தூக்கி வீசினர். பேப்பர் வெயிட்டுகள்பறந்தன. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பன்னீர்செல்வத்தை அதிமுகவினரிடம் இருந்து காப்பாற்றினர்.
தங்களை அதிமுகவினர் தாக்கியதாகக் கூறி திமுகவினர் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திமுகவினர் தங்களைத் தாக்கியதாகக் கூறி அதிமுகவினரும் விழுப்புரம்- பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இரு நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கி.மீ. தூரத்துக்கு இரு சாலைகளிலும்வாகனங்கள் நின்றன.
பொன்முடி மாட்டினார்:
அப்போது இந்தத் தகராறு குறித்து ஏதும் தெரியாத முன்னாள அமைச்சரும் திமுக தலைவர்ளில் ஒருவருமானபொன்முடி தனது டாடா சபாரி காரில் பாண்டிச்சேரி நெடுஞ்சாலைக்கு வந்தார்.
திமுக கொடி படபடக்க வந்த அந்தக் காரை சாலை மறியலில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் வழிமறித்தனர். காரில்இருந்து பொன்முடி இறங்கியவுடன் அவருடன் தகராறில் ஈடுபட்டனர். அவரை சுற்றி வளைத்து நின்றுகொண்டுதிமுகவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதிமுகவினரின் சாலை மறியல் காரணமாக அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் இந்த கலாட்டாவை பார்த்துக்கொண்டு பேசாமல் நின்றிருந்தனர்.
இதையடுத்து பொன்முடி தனது செல்போனில் காவல்துறை உயர் அதிகாரிகளையும் திமுகவினரையும் தொடர்புகொண்டார்.
பொன்முடியை அதிமுகவினர் தாக்கிவிட்டதாகக் கருதிய திமுகவினர் இந்த நெடுஞ்சாலைக்கு பல வாகனங்களிலவந்திறங்கினர். இதனால், திமுக- அதிமுகவினரிடையே பெரும் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து பொன்முடி திமுகவினரை சமாதானப்படுத்தி ஒதுங்கி நிற்கச் செய்தார். திமுகவினர் பெருமளவில்கூடிவிட்டதால் வேறு வழியில்லாத போலீசார் அதிமுகவினரை கலைந்து போகச் சொல்லி கெஞ்சினர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications