அக்டோபர் வரை படை வாபஸ் இல்லை: பெர்னாண்டஸ்
அகமதாபாத்:
காஷ்மீரில் சட்டசபை தேர்தல் முடியும் வரை எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெற மாட்டோம் என்றுபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
அகமதாபாத்தில் தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி.) நடத்திய தேசிய நல்லிணக்க முகாமில் கலந்துகொள்வதற்காக இன்று வந்திருந்த பெர்னாண்டஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் இன்னும் ஊடுருவிக் கொண்டு தான் உள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போதுஎல்லை தாண்டி வரும் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எனவே தேர்தல் முழுவதும் அமைதியாக நடந்து முடியும் வரை ராணுவத்தினர் வாபஸ் என்ற பேச்சுக்கேஇடமில்லை.
அதன் பிறகும் கூட அப்போது நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே படைகளை விலக்குவது குறித்து யோசித்து தான்முடிவெடுப்போம்.
தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவது குறித்து எப்போதும் போல் முன்னுக்குப் பின் முரணாகவே பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் பேசி வருகிறார். அவரை நம்பவே முடியாது என்றார் பெர்னாண்டஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications