2 மாதமாகியும் மதிப்பெண் பட்டியல் கிடைக்காத எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள்
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரு மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் ஒரு பள்ளியின்மாணவர்களுக்கு இன்னும் மதிப்பெண் பட்டியல்கள் தரப்படவில்லை.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவ- மாணவிகள் குழம்பிப் போயுள்ளனர்.
சென்னை பெரம்பூர் எபினேசர் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து தேர்வு எழுதிய 55 எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள்தான் இந்த சிக்கலில் மாட்டியுள்ளனர்.
இவர்களது பெயரை பள்ளி நிர்வாகம் சேர்க்கைப் பட்டியலில் (Admission list) சேர்க்கவில்லை என்று தெரிகிறது.ஆனால், இவர்களது பெயர் வருகைப் பதிவேட்டில் (Attendence register) சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களின் பெயர்கள் சேர்க்கைப் பட்டியலில் இல்லாததால் இவர்களுக்கு எப்படி மதிப்பெண் பட்டியல்தருவது என்று தெரியவில்லை. விதிமுறைப்படி தர இயலாது என்று பள்ளிக் கல்வி இயக்குனரத்தின் துணைஇயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறியுள்ளார்.
சேர்க்கைப் பட்டியலில் இல்லாத மாணவர்களின் பெயர்களில் சான்றிதழ் தருவது எப்படி என்று கல்விததுறைகுழம்பிப் போயுள்ளது.
ஆனால், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என பள்ளியின் தாளாளர் கிருஸ்துதாஸ் கூறியுள்ளார். இதைஎதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், உயர் கல்வியில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த 55 மாணவர்களும் எதிர்காலத்தைநினைத்து கலங்கிப் போய் உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications