அமெரிக்க நிறுவன மோசடி: இந்தியாவுக்கு ரூ. 575 கோடி நஷ்டம்
டெல்லி:
சமீபத்தில் போண்டியான அமெரிக்காவின் வோர்ல்ட்காம் நிறுவனத்திடம் இந்தியாவின் வி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் ரூ. 575 கோடி சிக்கியுள்ளது.
வோர்ல்ட்காம் நிறுவனம் சமீபத்தில் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தது. இந்த நிறுவனம் தனது லாபத்தை மோசடியாக 4பில்லியன் அளவுக்கு அதிகரித்துக் காட்டியது. சமீபத்தில் இந்த சர்வதேச மோசடி அம்பலமானது. தொடர்ந்து அந்தநிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்து போனது. இதனால் இந்த நிறுவனம் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையிலான தொலைபேசித் தொடர்புக்கும் இன்டர்நெட் தொடர்புக்கும் இந்தநிறுவனத்துடன் தான் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான வி.எஸ்.என்.எல். ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பேசப்படும் தொலைபேசியின் அழைப்புகள் வி.எஸ்.என்.எல். மூலமாகவோர்ல்ட்காம் நெட்வொர்க்குக்குச் செல்லும். பின்னர் இந்த அழைப்புகளை வோர்ல்ட்காம் தனது அமெரிக்கலோக்கல் நெட்வோர்க்குக்கு மாற்றும்.
அதே போல அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் வோர்ல்ட்காம்நெட்வொர்க்கில் இருந்து வி.எஸ்.என்.எல்க்கு வரும்.
வழக்கமாக அமெரிக்காவில் இருந்து தான் இந்தியாவுக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. இந்தியாவிலிருந்துஅமெரிக்காவுக்கு பேசப்படும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை குறைவு. இந்தியாவிலிருந்துஅமெரிக்காவுக்கு பேசப்படும் தொலைபேசி அழைப்புகைளப் போல 20 மடங்கு கால்கள் அமெரிக்காவில் இருந்துஇந்தியாவுக்கு வருகின்றன.
இதனால் வோர்ல்ட்காம் தான் இந்தியாவுக்கு ரூ. 575 கோடி பாக்கித் தொதைக தர வேண்டியுள்ளது. ஒவ்வொரு 3மாதங்களுக்கு ஒருமுறை வி.எஸ்.என்.எல்க்கு தனது பாக்கித் தொகையை வோர்ல்ட்காம் செலுத்தி வந்தது.
இப்போது இந்த ரூ. 575 கோடிப் பணம் வருமா என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. இந்தப் பணத்தைத் தரமுடியாது என்று வோர்ல்ட்காம் கைவிரித்துவிட்டால் இந்தியாவுக்கு ரூ. 575 கோடி வரை நஷ்டம் ஏற்படும்.
இது குறித்துக் கேட்டபோது வி.எஸ்.என்.எல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் குப்தாவிடம் கருத்துக் கேட்டபோது,
நாங்கள் வோர்ல்ட்காம் நிறுவனத்திடம் பேசி வருகிறோம். முழு அளவில் அந்த நிறுவனத்தின் நிலைமைதெரிந்தால் தான் நமது பணம் குறித்த விவரம் தெரியவரும் என்றார்.
பணம் வருவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications