பிளஸ் டூ உடனடி மறு தேர்வில் ஆள் மாறாட்டம்
தேனி:
தற்போது நடந்து வரும் பிளஸ் டூ உடனடி மறு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த நபர் தேனி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
பிளஸ் டூ தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி மறு தேர்வு நடந்து வருகிறது.இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்து இந்த ஆண்டிலேயே மேற்படிப்புகளில் சேர்வதற்கு வசதியாக தமிழக அரசுஇம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பாச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர்தேனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை தேர்வு எழுதினார்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியை வழக்கமான சோதனையை நடத்திக் கொண்டிருந்தார்.
செந்தில்குமாரின் ஹால் டிக்கெட்டை வாங்கிப் பார்த்த தலைமை ஆசிரியை, அதிலுள்ள புகைப்படத்திற்கும்செந்தில்குமாருக்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
உடனே செந்தில்குமாரிடம் கடுமையான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் மதுரையைச் சேர்ந்தபிரதீப்குமார் என்பவருக்குப் பதிலாக செந்தில்குமார் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவரம் தெரியவந்தது.
இதையடுத்து தலைமை ஆசிரியை ஹில்டா மேரி தேனி போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்தபோலீசார் செந்தில்குமாரைக் கைது செய்தனர்.
பின்னர் பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications