கிணற்றில் விழுந்த பஸ்: சாவு எண்ணிக்கை 9 ஆனது- காயமடைந்தவர்களிடம் லஞ்சம் கேட்டு நச்சரிப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

பஸ் கிணற்றில் விழுந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதில் 5 பேர் பெண்கள். 20பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் லஞ்சம்கேட்டு கொடுமைபடுத்தினர். சரியான சிகிச்சையும் அளிக்கவில்லை.

இதனால் விபத்தில் சிக்கி சின்னாபின்னாவாகி வந்த பயணிகளின் உறவினர்கள் தங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தசபாநாயகர் காளிமுத்துவை கெரோ செய்தனர். இதையடுத்து சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன்தலையிட்டு மருத்துவமனை ஊழியர்களை எச்சரித்தார்.

இதன் பின்னர் தான் மருத்துவமனைக்குள் நுழைய காளிமுத்துவை பயணிகளின் உறவினர்கள் அனுமதித்தனர்.

நேற்று சேலத்திலிருந்து ராசிபுரம் சென்று கொண்டிருந்த இந்த அரசு பஸ் பொய்மான்கரடு என்ற இடத்தில்சாலையோர விவசாயக் கிணற்றில் விழுந்தது.

அந்த பஸ்சில் மொத்தம் 45 பயணிகள் இருந்துள்ளனர். கிணற்றில் பஸ் பாய்ந்தபோது அதை ஓட்டிச் சென்றடிரைவரும், கண்டக்டரும் கீழே குதித்துத் தப்பிவிட்டனர்.

தீயணைப்புப் படையினரும் போலீசாரும் பொது மக்களும் இணைந்து கிணற்றில் இருந்து பயணிகளை மீட்டனர்.நேற்று நள்ளிரவு வரை உடல்கள் மீட்கப்பட்டன. பல உடல்கள் கிணற்றில் சகதியில் சிக்கிக் கிடந்தன.

நிவாரணம் அறிவிப்பு:

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000மும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000மும்வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தை அமைச்சர் தனபால் பார்வையிட்டார்.

சாலையரோத்தில் உள்ள அனைத்து விவசாயக் கிணறுகளையும் உடனடியாக மூடவும் மாவட்டக் கலெக்டர்ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கிணறுகள் மிகப் பெரியவை. இவற்றை சுற்றி பெரும்பாலும் தடுப்பு சுவர்களும் இருப்பதில்லை.சாலையையொட்டி இவை அமைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+