கர்நாடக முதல்வருடன் இளங்கோவன் சந்திப்பு: காவிரியில் நீர் விடக் கோரினார்
பெங்களூர்:
காவிரியில் நீர் திறந்துவிடுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
காவிரியில் தண்ணீர் விட கர்நாடகம் மறுத்து வருவதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும்தஞ்சாவூர், திருவாரூ மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே, பயிர்கள் காய ஆரம்பித்துவிட்டன. இன்றும் 15 நாட்களுக்கு கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்வராவிட்டால் மீதம் இருக்கும் பயிர்களும் காயந்து நாசமாகிவிடும்.
இதையடுத்து தண்ணீர் விடுமாறு கர்நாடகத்தை பல தரப்பினரும் வற்புறுத்தி வருகின்றனர். பிரதமர் வாஜ்பாய்தொடங்கி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தொலைபேசி, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் நேரில் சந்தித்துகோரிக்கை விடுத்தார்.
ஆனால், எந்தப் பலனும் ஏற்படவில்லை. இந் நிலையில் இன்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் பெங்களூரில் நேரில் சந்தித்து காவிரியில் நீரைத் தந்து விவசாயிகளை காப்பாற்றுமாறுகேட்டுக் கொண்டார்.
அவருடன் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் உடன் சென்றனர். காங்கிரஸ் குழுவுடன் நானும் செல்வேன் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் வாசனும் கூறியிருந்தார். அவரை கழற்றிவிட்டுவிட்டு இளங்கோவன் மட்டும் வந்துசந்தித்தது ஏன் என்று தெரியவில்லை.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தவுடன் தமிழகத்துக்கு நிச்சயம் தண்ணீர் திறந்துவிடுவதாக தன்னிடம்கிருஷ்ணா உறுதியளித்ததாக இளங்கோவன் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
வீரமணி ஆர்பாட்டம்:
இந் நிலையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகக் கூறி திராவிடர் கழகத்தின்தலைவர் கி.வீரமணி தலைமையில் அந்தக் கட்சியினர் இன்று தஞ்சாவூரில் ஆர்பாட்டம் நடத்தினர்.
இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் ஆலோசனை:
இதற்கிடையே குறுவைப் பயிர்கள் பாதிப்பு குறித்தும், காவிரியில் நீர் விட கர்நாடகம் மறுப்பதை எதிர்த்து எடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க காவிரி பாசனப் பகுதியைச் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டிணம், கரூர், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்ஒன்றாகக் கூடி விவாதித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவசாயிகள் பிரிவு, திமுக விவசாயிகள் அணி ஆகியவை ஏற்பாடு செய்த இந்தக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், காவிரியில் நீர் இல்லாததால் 10 லட்சம் விவசாயிகளின்குடும்பத்தினர் பட்டினி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அரிசியை கிலோ ரூ. 3.50க்கு வழங்கிவிவசாயிகளின் பட்டினியை அரசு போக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications