விமானங்கள் மோதல்: சுவிஸ் மீது ரஷ்யா புகார்
யூபெர்லிங்கன் (ஜெர்மனி):
ஜெர்மனியில் நேற்று முன்தினம் நடுவானில் விமானங்கள் மோதிக் கொண்டதற்கு சுவிஸ் விமானத்துறைஅதிகாரிகளின் அலட்சியமே காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
சுவிஸ்- ஆஸ்திரிய எல்லையில் பறந்தபோது தான் ரஷ்ய பயணிகள் விமானமும் டி.எச்.எல். கூரியர் நிறுவனத்தின்போயிங் சரக்கு விமானமும் நேருக்கு நேர் நடுவானில் மோதின. இதில் 44 குழந்தைகள் உள்பட 71 பேர்பலியாயினர்.
விபத்து நடந்தபோது இந்த விமானங்களும் சுவிஸ் விமானக் கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பில் இருந்தன.ரஷ்ய விமானத்தின் உயரத்தை குறைக்கச் சொல்லி பலமுறை சுவிஸ் கட்டுப்பாட்டு அறை ஆணையிட்டதாகவும்ஆனால், அதை ரஷ்ய விமானிகள் காதில் வாங்கவில்லை என்றும் சுவிஸ் கூறியுள்ளது.
கடைசி நேரத்தில் இரு விமானங்களின் விமானிகளும் எதிரே இன்னொரு விமானம் வருவதைப் பார்த்து வழியைமாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது.
நேற்று பகலில் ரஷ்ய விமானத்தில் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் டி.எச்.எல். நிறுவனத்தின் பிளாக்பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இவை இன்று சோதனையிடப்படவுள்ளன.
இந்த விபத்து குறித்து ஆராயவும், கருப்புப் பெட்டி மற்றும் பிளைட் வாய்ஸ் ரெக்கார்டரை ஆராயவும் ரஷ்ய,அமெரிக்க நிபுணர் குழுக்கள் ஜெர்மனி வந்துள்ளன.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications