ஆப்கான் துணை அதிபர் சுட்டுக் கொலை:
காபூல்:
ஆப்கானிஸ்தானின் துணை அதிபரான ஹாசி அப்துல் காதிர் நேற்று அடையாளம் தெரியாத 2 பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஜலாலாபாத் நகரின் ஆளுநராகவும் இருந்த அப்துல்காதிர், நேற்று தன்னுடைய அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்டார்.
அப்போது திடீரென்று 2 மர்ம நபர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சராமாரியாகச் சுட்டனர். மொத்தம் 36ரவுண்டுகள் வரை அவர்கள் சுட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் அப்துல் காதிரும் அவருடைய டிரைவரும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த சுவரில் மோதி நின்றது. இந்தத் துப்பாக்கிச் சூடுசம்பவத்தில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட அப்துல் காதிர், நார்த்தர்ன் அலையன்சைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஆப்கானிஸ்தானின்பழங்குடியான பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவராவார். ரஷ்ய ராணுவத்தை ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்துவிரட்டியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
தலிபான் தீவிரவாதிகள் தான் அப்துல் காதிரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஆப்ாகானிஸ்தான் அமைச்சரவை பதவியேற்ற பிறகு கொலை செய்யப்பட்ட 2வதுஅமைச்சர் அப்துல் காதிர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுத் துவக்கத்தில் மெக்கா செல்லக் காத்திருந்த பயணிகள் விமானம் வருவதற்கு மிகவும் தாமதமானதால்அங்கு வந்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல் ரகுமானை அடித்தே கொன்று விட்டனர் என்பதுநினைவிருக்கலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications