கிரிமினல்களுக்கு தடை: தேர்தல் கமிஷனுக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு
டெல்லி:
தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்ற தேர்தல்கமிஷனின் புதிய விதிமுறை திட்டத்தை டெல்லியில் இன்று காலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்நிராகரித்தது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய சொத்து, கடன், கல்வித் தகுதி மற்றும் அவர்கள் மீதுதொடரப்பட்டுள்ள வழக்குகள் ஆகியவை குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கடந்த மே 2ம் தேதிஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வேட்புமனுவில் வேட்பாளர்கள் குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் கமிஷனும் சமீபத்தில் புதிய விதிமுறைகளைஅறிவித்தது.
அவ்வாறு தகவல்களைத் தெரிவிக்கத் தவறினாலோ அல்லது உண்மையான தகவல்களை மறைத்தாலோ அந்தவேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல் கமிஷன்கூறியது.
ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு நடக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் இந்தப் புதிய விதிமுறைகளின் படி தான் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.
அரசியல் கட்சிகளிடையே இந்தப் புதிய உத்தரவு பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை மத்திய சட்டத்துறை அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் டெல்லியில்அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் கமிஷனின் புதிய விதிமுறைத் திட்டத்தைநிராகரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் வி.கே. மல்ஹோத்ரா நிருபர்களிடம்கூறினார்.
தேர்தல் கமிஷனின் இந்தப் புதிய உத்தரவுப்படி ஒரு சாதாரண வருமான அதிகாரி கூட ஒரு வேட்பாளரின்மனுவைத் தள்ளுபடி செய்யும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் இந்த உத்தரவைப் புறக்கணிப்பது என்றுஅனைத்துக் கட்சியினரும் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளதாகவும் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜியும் இதே கருத்தைத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஜோதி, திமுக சார்பில் எம்.பிக்களான விடுதலை விரும்பிமற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ஜ.க., காங்கிரஸ் தவிர பிற கட்சிகளும் இதேகருத்தையே பிரதிபலித்தன.
விதிமுறைக்கு எதிராக சட்டம்:
மேலும், தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவை எதிர்த்து புதிய சட்ட மசோதா கொண்டு வரவும் அனைத்துக் கட்சிகள்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கி தேர்தல் கமிஷனின்விதிமுறையை உடைத்தெறிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் பதிலடி:
இந்த விதிமுறைத் திட்டத்தை அனைத்துக் கட்சிகளும் எதிர்த்த போதிலும், அது தொடர்ந்து அமலில் இருக்கும்என்று தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி தான் இந்த விதிமுறைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் கட்சிகள்ஏற்காவிட்டாலும் இந்தத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கட்சிகள் எடுத்துள்ள முடிவுகள் குறித்துஎங்களுக்குக் கவலை இல்லை என்றும் தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல்களில் கிரிமினல்களின ஆதிக்கத்தை உடைக்க உச்ச நீதிமன்றமும் மற்றும் தேர்தல் கமிஷனும் கொண்டு வந்தநல்ல உத்தரவுக்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதன் மூலம் குற்றங்களையும் எங்களையும்பிரிக்க முடியாது என்று அரசியல்வாதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications