கலைக்கப்படுகிறது தமாகா: 5 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சியுடன் தமாகாவை இணைப்பது குறித்த அதிகாரப்பூர்வமான தீர்மானம் இன்று நடைபெற்றதமாகாவின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமாகாவின் அதிருப்தி எம்.எல்.ஏவானடாக்டர் குமாரதாஸ் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

காங்கிரசுடன் தமாகாவை இணைப்பது என்று கடந்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்துமூன்று முறை இதற்கான தேதிகள் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்டு 14ம் தேதி மதுரையில் இணைப்பு விழாநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரசுடன் இணைவது குறித்த அதிகாரப்பூர்வமான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகதமாகாவின் பொதுக்குழு இன்று கூடியது.

அதன்படி இதற்கான தீர்மானம் இன்று தமாகா பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமாகா தலைவரான ஜி.கே. வாசன் இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

மூப்பனாரின் விருப்பத்திற்கு முழு வடிவம் கொடுத்து தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவதற்காகவும் வகுப்புவாத மற்றும் பாஸிசவாத அரசியல் கட்சிகளை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சித் தலைவிசோனியா காந்தியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவும் அக்கட்சியுடன் தமாகா இணைவதாக அந்தத் தீர்மானத்தில்கூறப்பட்டுள்ளது.

தமாகாவின் பெயரையோ, சைக்கிள் சின்னத்தையோ அல்லது கொடியையோ வேறு யாரும் பயன்படுத்தக் கூடாதுஎன்றும் ஒரு தீர்மானத்தில் தெரிவித்துள்ள இந்தக் கட்சி, இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு விரைவில்தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைப் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும்கொண்டாடுவதற்கான மற்றொரு தீர்மானமும் இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

காமராஜர் அரங்கில் இன்று கூடிய பொதுக்குழு தான் தமாகாவின் கடைசிப் பொதுக்குழுக் கூட்டம் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னதாக காங்கிரஸ் மைதானத்தில் உள்ள முன்னாள் தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரின்நினைவிடத்தில் வாசன் உள்ளிட்ட தமாகாவினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு:

இதற்கிடையே இன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தை அதிருப்தி எம்.எல்.ஏக்களா டாக்டர் குமாரதாஸ், ஹக்கீம்,பாரமலை, மணி நாடார் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் புறக்கணித்தனர்.

மேலும் பாண்டிச்சேரி எம்.எல்.ஏவான தேனி ஜெயக்குமாரும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தார்.

காங்கிரசுடன் மீண்டும் தமாகா இணைவதையும் தமாகா கலைக்கப்படுவதையும் ஆரம்பத்திலிருந்தே இவர்கள்அனைவரும் எதிர்த்து வந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து இவர்கள் தமாகா தலைமைக்குக் கடிதம்அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.

வாசன் பேட்டி:

இந்தப் பொதுக்குழுக் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் வாசன் பேசியதாவது:

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் அமைப்பதற்காகவே நாங்கள் காங்கிரசில் மீண்டும்இணைகிறோம்.

காங்கிரசில் இணைந்த பிறகு தமிழக காங்கிரசுக்கு சோனியா காந்தி யாரைத் தலைவராக நியமிக்கிறாரோ அவரைநாங்கள் முழு மனதுடன் ஆதரிப்போம்.

அதன்படி மறைந்த தலைவர் மூப்பனாரின் லட்சியத்தையும் நாங்கள் நிறைவேற்றப் போகிறோம்.

காங்கிரசில் இணைந்த பிறகு அதன் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் படி செயல்படுவோம் என்றார்வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+