சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படிப்பு ரத்து: எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
சென்னை சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பி.எல். சட்டப் படிப்பு நிறுத்தப்பட்டதை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இந்த இரண்டு சட்டப் படிப்புகளையும் ரத்து செய்து விட்டுபி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) என்ற படிப்பை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த மே30ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
இந்தப் படிப்பில் சேருவதற்கு குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.மேலும் இந்தப் படிப்பில் சேருவதற்கு ரூ.39,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இதுவரை பிளஸ் டூ முடித்தவர்கள் 5 ஆண்டு பி.எல். சட்டப் படிப்பில் சேரலாம் என்றும் ஏதாவது டிகிரிமுடித்தவர்கள் 3 ஆண்டு சட்டப் படிப்பில் சேரலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படியே இவ்வளவு காலமும்சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த பி.எல். சட்டப் படிப்புகளையும் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மட்டும் சமீபத்தில் ரத்துசெய்தது தமிழக அரசு.
இதை அந்த சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் கடுமையாக எதிர்த்தனர். அதன்படி இந்திய மாணவர் சங்கத்தைச்சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த திங்கள்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தினர்.
சட்டக் கல்லூரிக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் பி.எல். சட்டப் படிப்பை ரத்து செய்ததமிழக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். புதிய படிப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள அதிகமான கட்டணத்தொகையை எதிர்த்தும் மாணவ-மாணவிகள் கோஷம் போட்டனர்.
இந்நிலையில் பி.எல். சட்டப் படிப்புகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மழைமேனி பாண்டியன்தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சட்டக் கல்லூரியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பி.எல். படிப்புகளை சென்னைஅம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ரத்து செய்யப்பட்டிருப்பது நீதிக் கொள்கைக்கே எதிரானதாகும்.
இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படும் அபாயமும்ஏற்பட்டுள்ளது. மேலும் ஏழை எளிய மாணவர்கள் சட்டக் கல்வி படிப்பதற்கான வாய்ப்புக்களே இல்லாமல்போய்விடும்.
எனவே ஏற்கனவே இருந்த 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பி.எல். படிப்புகளை மீண்டும் தொடர தமிழக அரசுக்குஉத்தரவிட வேண்டும்.
அல்லது அதற்குப் பதிலாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) படிப்பிற்கானஇடங்களின் எண்ணிக்கையை 800ஆக உயர்த்த உத்தரவிட வேண்டும்.
அதுவரை மே 30ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையைச் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றுஅம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications