திருச்சி மாநகராட்சியில் திமுக- த.மா.கா, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் திமுக மற்றும் காங்கிரஸ்- த.மா.கா. கவுன்சிலர்கள் இடையே கடும் மோதல் நடந்தது.
திருச்சி மாநகராட்சி தமிழ் மாநில காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அக் கட்சியைச் சேர்ந்த சாருலதா தொண்டைமான் தான்மேயராக உள்ளார். த.மா.காவுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்து வருகிறது.
ஆனால், கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் திமுகவினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.
இன்று காலை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் தொடங்கிய போது திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். திமுகபெண் கவுன்சிலர்கள் கருப்பு சேலை அணிந்து வந்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன், சென்னை மேயர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டதைத் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கோரினர்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் த.மா.கா. கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்ச் சண்டை ஏற்பட்டது. பெண் திமுக கவுன்சிலர்கள் கூட்டமாகப் போய் மேயரின்இருக்கை முன் அமர்ந்து மேயருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் திமுகவை எதிர்த்து கோஷம்போட்டனர்.
இரு தரப்பினரும் நா கூசும் வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இந்தக் கூச்சல் குழப்பத்தால் அவைக்கூட்டத்தை மேயர் சாருலதா தொண்டைமான் ஒத்தி வைத்தார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications