மாநில அரசால் மதிமுகவை தடை செய்ய முடியாது: ஜனா
சென்னை:
அரசியல் கட்சிகளை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உள்ளது என மத்திய சட்ட அமைச்சரும் முன்னாள் பா.ஜ.க.தலைவருமான ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
மதிமுகவைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது கிருஷ்ணமூர்த்திஇவ்வாறு பதிலளித்தார்.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின் சென்னை வந்த அவர் இன்று காலை பா.ஜ.க. அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:
பதிவு செய்யப்பட்ட எந்த அரசியல் கட்சியையும் மத்திய அரசு மட்டுமே தடை செய்ய முடியும். எந்த மாநில அரசாவது ஏதாவது ஒருஅரசியல் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விரும்பினல் அது குறித்து மத்திய அரசிடம் தான் பேச வேண்டும்.
தமிழக அரசிடம் இருந்து மதிமுகவைத் தடை செய்யக் கோரி இதுவரை மத்திய அரசுக்கு எந்தப் பரிந்துரையும் வரவில்லை. அப்படியேதமிழக அரசு பரிந்துரைத்தாலும் அதை மத்திய உள்துறை அமைச்சகம் தான் பரிசீலித்து முடிவெடுக்கும் என்றார்.
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு அதில் திருத்தம் கொண்டு வருமா என்று கேட்டபோது,
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அந்த சட்டத்தில் ஏற்கனவே பல வழிமுறைகள் உள்ளன. இதனால் தான் இந்தவழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் என்று வைகோ கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றார்.
வைகோ விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக மேனகா காந்தி கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது.
அது அவருடையே சொந்த கருத்தாக இருக்கலாம். இந்த நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் சொல்லும் கருத்துக்கும்பதில் சொல்ல மத்திய அரசு தயாராக இல்லை என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளனவே என்று கேட்டபோது, நான் மத்திய சட்ட அமைச்சராகி ஒரு வாரம்தான் ஆகிறது. விரைவில் அந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்றார்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications