மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் பிடிபட்டது: திருச்சி ஆர்.டி.ஓ. ஊழியர்களுடன் தொடர்பா?
திருச்சி:
திருச்சியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த இருவரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 21 புத்தம் புதியயமஹா, ஹீரோ ஹோண்டா, சுசூகி மோட்டர் சைக்களிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும்.
அவர்களிடம் இருந்து திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் போலி ரப்பர் ஸ்டாம்புகள், போலி ஆர்.சி. புத்தகங்கள் ஆகியவையும்கைப்பற்றப்பட்டன.
சமீப காலமாக திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு மிக அதிகமாகிவிட்டது. இதையடுத்து திருடர்களைப் பிடிக்க தனிப் படைகளைபோலீஸ் கமிஷ்னர் நியமித்தார்.
இந்தப் படையினர் ரகசியமாக கண்காணித்தபோது தாமஸ் ராபர்ட் (29), சங்கர் (39) ஆகியோர் சிக்கினர்.
இவர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்ற போலீசார் நன்றாக கவனித்தனர். அடி தாங்க முடியாத இந்த இருவரும் பைக்குகள்திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இந்த பைக்குகளை இவர்கள் காவிரி நதிக்குள் உள்ள குளியலறையில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்தக்குளியலறையில் சோதனை நடத்தியபோது அங்கு 21 புத்தம் புதிய பைக்குகள் இருந்தன.
இவற்றை திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் ஆகிய இடங்களில் இவர்கள் திருடியுள்ளனர். இந்த இருவருடன் மேலும் பலபேருக்கும் பைக் திருட்டில் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது.
அந்தக் குளியல் அறையில் திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் போலி ரப்பர் ஸ்டாம்புகள், போலி ஆர்.சி. புத்தகங்கள், பதிவுப் பத்திரங்கள்ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. திருடிய வாகனங்களுக்கு புதிய எண்ணையும் அதற்கான ஆர்.சி. புத்தகத்தையும் இந்தக் கும்பலேதயாரித்துக் கொடுத்துள்ளது.
இந்தக் கும்பலுக்கும் திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்களுக்கும் கூட தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து விசாரிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications