ஜெ. நாளை ராமநாதபுரம் வருகை: ராமேஸ்வரத்தில் தீவிர கண்காணிப்பு
ராமநாதபுரம்: பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா நாளை ராமநாதபுரம் செல்கிறார். இதையடுத்துராமேஸ்வரத்திலும், ராமநாதபுரத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை காலை சிறப்பு விமானத்தில் மதுரை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்கிறார்.
அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதகாதி கல்லூரி அரங்கில் ரூ. 300 கோடி செலவில் பல்வேறு அரசுத் திட்டங்களைஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதில் முக்கியமான திட்டம் ரூ. 140 கோடியிலான மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல்பாதுகாப்புத் திட்டமாகும்.
மேலும் மீனவர்களுக்கான உதவித் திட்டம், ராமநாதபுரம் குடிநீர் திட்டம், கிராமப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தையும் ஜெயலலிதாநாளை தொடங்கி வைக்கிறார்.
புலிகளுக்கு உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் அவர் ராமநாதபுரம் வருவதால் ராமேஸ்வரத்தில்மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் ராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளார். க்யூ பிராஞ்ச் போலீசாரும் உளவுப் பிரிவினரும்ராமேஸ்வரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையினருடனும் ஐ.ஜி. ஆலோசனை நடத்தினார். இதையடுத்துகடல் பகுதியிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கடலோரக் காவல்படைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா வருகையை ஒட்டி ராமநாதபுரத்தில் அதிமுகவினர் வரவேற்பு வளைவுகளையும், பிரம்மாண்டமானபோஸ்டர்களையும் ஒட்டி அமர்களப்படுத்தி வருகின்றனர். பெரிய கட்-அவுட்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
அவர் பயன்படுத்தவுள்ள சாலைகளில் தார் கொட்டப்பட்டு மேக்-அப் போடப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications