ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு போன ரூ.40 கோடி!!
ஈரோடு:
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து மீட்பதற்காக அவனுக்கு ரூ.40 கோடி வரைகொடுக்கப்பட்டதாகவும் அதில் ரூ.10 கோடியை ராஜ்குமாரின் மகன்களே கொடுத்துள்ளதாகவும் ஈரோடுநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் கூறினார்.
ராஜ்குமார் கடத்தல் வழக்கில் "நக்கீரன்" ஆசிரியர் கோபால் மற்றும் அதன் நிருபர் சிவசுப்பிரமணியம்ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு உள்பட வேறு பல வழக்குகள் தொடர்பாக சிவசுப்பிரமணியம் ஏற்கனவே கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 6ம் தேதி ஈரோடுமாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சிவசுப்பிரமணியத்துக்கு ஜாமீன் கேட்டு 2வது முறையாக சமீபத்தில் அவருடைய வக்கீல் மோகன்அதே நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நீதிபதி தமிழ்வாணன் முன் இந்த மனு மீதான விசாரணைநடந்தது.
ராஜ்குமார் கடத்தலுக்கு சிவசுப்பிரமணியமும் காரணம் என்று இதுவரை போலீசார் நிரூபிக்கவில்லை என்றுவாதாடிய அவருடைய வக்கீல் மோகன், இதனால் கடந்த 63 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரைஉடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரான சங்கர நாராயணன் தன் வாதத்தின் போதுகூறுகையில்,
ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கோபாலுக்கும் சிவசுப்பிரமணியத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பல்வேறுதகவல்கள் கிடைத்துள்ளன.
ராஜ்குமாரை விடுவிப்பதற்காக ரூ.40 கோடி வரை வீரப்பனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.10கோடி வரை ராஜ்குமாரின் மகன்களே கொடுத்துள்ளனர்.
ராஜ்குமாரின் மகன்கள் கொடுத்த இந்த ரூ.10 கோடியை கோபால் தான் கொண்டு போய் வீரப்பனிடம்கொடுத்துள்ளார். இதற்கு சிவசுப்பிரமணியமும் உதவியாக இருந்துள்ளார்.
எனவே சிவசுப்பிரமணியத்தை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்றார் சங்கர நாராயணன்.
இதற்குப் பதிலளித்த வக்கீல் மோகன், ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பணம் கை மாறியிருப்பதாக தற்போதுதான் அரசு தரப்பில் முதல் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு வழக்கறிஞர் அறிவித்த இந்தவிவரம் குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர் சங்கர நாராயணன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்ட ரகசியவிசாரணையின் போது தான் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த விவரத்தைப் பதிவு செய்தால்போலீசார் விசாரணையில் தடங்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதை இப்போது பதிவு செய்ய வேண்டியஅவசியமில்லை என்றார்.
ஆனால் இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்வாணன், கோபால் மூலம் ரூ.10 கோடி வீரப்பனுக்குக்கைமாறிய விவரம் குறித்து அரசு வழக்கறிஞர் கூறிய கருத்தைப் பதிவு செய்து கொண்டார்.
பின்னர் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதி தமிழ்வாணன் ஒத்திவைத்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications