துணை ஜனாதிபதி பதவிக்கு கடும் போட்டி உருவானது
டெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மூத்தபா.ஜ.க. தலைவரான பைரோன் சிங் ஷெகாவத் இன்று தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து எதிர்க் கட்சிகள் சார்பில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சுசில்குமார்ஷிண்டே போட்டியிடுகிறார். ஷிண்டேவுக்கு பெரும்பாலான எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் துணைஜனாதிபதி தேர்தலில் மிகக் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான ஷெகாவத்தின் பெயரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின்ஒருங்கிணைப்பாளரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் நேற்று மாலை அறிவித்தார்.
இந்தக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் தவிர அதிமுகவும் ஷெகாவத்தை ஆதரிக்கிறது. பகுஜன் சமாஜ் போன்ற சிலகட்சிகளும் ஷெகாவத்துக்கு ஆதரவளிக்கப் போவதாகக் கூறியுள்ளன.
இந்நிலையில் ஷெகாவத் இன்று பகல் 12.30 மணிக்கு தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பிரதமர்வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோர் அவருடைய பெயரை முன் மொழிந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஷெகாவத், தேசிய ஜனநாயகக் கூட்டணி தவிர வேறு பல கட்சிகளும் எனக்குஆதரவளிப்பதால் இந்தத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வெற்றி பெறுவேன்என்று உறுதியுடன் கூறினார்.
முன்னாள் போலீஸ்காரரான ஷெகாவத்திற்கு இன்று திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைகோர்த்த எதிர்க் கட்சிகள்:
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்று கூட இருந்தன. ஆனால், டாக்டர்அப்துல் கலாமின் பெயரை அறிவித்து எதிர்க் கட்சிக் கூட்டணியையே உடைத்தது பா.ஜ.க. காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வேட்பாளரை எதிர்க்க இருந்த சமாஜ்வாடிக் கட்சி, லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்றவை கலாமுக்கு ஆதரவுதெரிவித்தன. அப்துல் கலாமை எதிர்க்க காங்கிரசும் தயாராக இல்லாததால் அக் கட்சியின் ஆதரவும் கிடைத்தது.
ஆனால், துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைவரான பைரோன் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவு தர காங்கிரஸ்மறுத்துவிட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு பிரதமர் வாஜ்பாய்பேசினார். ஆனால், ஷெகாவத்துக்கு ஆதரவளிக்க சோனியா மறுத்து விட்டார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சுசில்குமார் ஷிண்டேவை துணை ஜனாதிபதி பதவிக்குசோனியா காந்தி இன்று அறிவித்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் பலமுறை மத்திய அமைச்சராகஇருந்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இரண்டு முறை இருந்துள்ளார்.
இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாடிக் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியகட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுவிட்டதாகவும் அனைவரும் ஷிண்டேவை ஆதரிக்க முன் வந்துள்ளதாகவும்காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.
இது தொடர்பாக சோனியா காந்தி கடந்த இரு நாட்களாக லாலு பிரசாத் யாதவ், அமர்சிங், பர்தன், ஹர்கிசன் சிங்சுர்ஜித் ஆகியோருடன் பேச்சு நடத்தினார். இதில் சமாஜ்வாடி கட்சி தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்துவிட்டனர்.சமாஜ்வாடிக் கட்சி விரைவில் தனது முடிவை அறிவிக்கும். ஷிண்டேவை அவர்கள் ஆதரிப்பதாகஅதிகாரப்பூர்வமில்லாமல் தெரிவித்துள்ளனர் என்றார் ரெட்டி.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications