இந்தியாவை தாக்க ஆப்கான் தீவிரவாதிகள் திட்டம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீருக்குள் புகுந்துள்ளதாகவும்அவர்கள் இந்தியாவில் பயங்கரமான தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பால் தடை செய்யப்பட்டுள்ள லஷ்கர்-ஏ-தொய்பா,ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் ஹர்கத்-உல்-முஜாகிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான்அதிகமான அளவில் ஊடுருவியுள்ளதாக "நியூஸ்லைன்" என்ற பாகிஸ்தான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தங்கள் அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு அவை தற்போது தங்களுடையஅலுவலகங்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு மாற்றியுள்ளன என்றும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.

ஆனாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் முழு ஆதரவுடன் தான் இந்தத் தீவிரவாதிகள் இங்குபுகுந்துள்ளனர் என்று தெரிகிறது.

பின்னர் சிறிது சிறிதாக இந்தத் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து பெரும் தாக்குதல் நடத்தத்திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி காஷ்மீர் சட்டசபையிலும், பின்னர் டிசம்பர் 13ம் தேதி இந்தியநாடாளுமன்றத்திலும் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதல்கள் போலவே பல தற்கொலைதாக்குதல்களுக்கும் அவர்கள் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையிலும் பாதுகாப்புப் படைவீரர்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+