65 அடி ஆழ குழியில் விழுந்து சிறுவன் பலி

காஞ்சிபுரம்:ஆழ்குழாய் கிணற்றுக்காகக் தோண்டப்பட்ட 65 அடி ஆழ குழியில் விழுந்த 8 வயது சிறுவன் உயிருடன்மீட்கப்பட்ட போதிலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஆழ்குழாய் கிணற்றுக்காகக் தோண்டப்பட்ட 65 அடி ஆழ குழியில் விழுந்த 8 வயது சிறுவன் உயிருடன்மீட்கப்பட்ட போதிலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டி சத்திரம் அருகே உள்ள தைப்பாக்கம் என்ற கிராமத்தில் இந்த சோகச் சம்பவம்நேற்று ஏற்பட்டது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தன்னுடைய நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காகக்குழி தோண்டினார்.

சுமார் 65 அடி ஆழம் வரை குழியைத் தோண்டியவர்கள் நேற்று பகல் சுமார் 2 மணியளவில் கோணிப் பை ஒன்றைவைத்து அந்தக் குழியை மூடிவிட்டுச் சாப்பிடச் சென்று விட்டனர்.

குழி தோண்டுவதற்காக "போர்" போட்டவர்களில் ஒருவரான மணி என்பவரின் மகன் ராம்குமார் (8) அப்பகுதியில்ஓடி வந்து கொண்டிருந்தான்.

அப்போது அவன் அந்தக் கோணிப் பையில் காலை வைக்கவே உடனே அந்த 65 ஆடி ஆழக் குழிக்குள் விழுந்துவிட்டான். அவன் குழிக்குள் விழுந்ததை யாருமே கவனிக்கவில்லை.

இந்நிலையில் சாப்பிடச் சென்றவர்கள் மீண்டும் "போர்" போடுவதற்காக வந்த போது அங்கிருந்த குழி திறந்துகிடப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். அதன் பிறகு தான் உள்ளே சிறுவன் விழுந்திருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையே தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் பறந்தது. அவர்கள் விரைந்து வந்து அந்தக் குழிக்கு அருகிலேயேமற்றொரு பள்ளம் தோண்டி ராம்குமாரை மீட்க முடிவு செய்தனர்.

பிற்பகல் சுமார் 3 மணிக்கு ஆரம்பித்த பள்ளம் தோண்டும் பணி இரவு 9 மணிக்குத் தான் முடிவடைந்தது. பின்னர்ராம்குமார் சிக்கிக் கொண்டிருந்த குழியை நோக்கி மற்றொரு சுரங்கப் பாதை தோண்டப்பட்டது.

அந்தப் பாதை சரியாக ராம்குமார் சிக்கிக் கொண்டிருந்த குழியில் முடிவடைந்தது. உடனே அவனைப்பாதுகாப்புடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர் தீயணைப்பு வீரர்கள். பேச்சு மூச்சு எதுவும் இல்லாமல் மயங்கியநிலையில் இருந்தான் ராம்குமார்.

இதற்குள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குத் தகவல் தரப்பட்டும் கூட டாக்டர்கள் யாரும் ராம்குமார்மீட்கப்பட்ட நேரம் வரை வந்து சேரவில்லை.

Kanchipuram

இதையடுத்து தீயணைப்பு வீரர்களே தங்களுடைய வண்டியில் அவனைத் தூக்கிக் கொண்டு போய் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்சிஜன் செலுத்தப்பட்டு,இருதய மசாஜும் அவனுக்குச் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+