""ஆண்டவன் விதித்திருந்தால் அரசியலுக்கு வருவேன்"": மலேசிய விழாவில் ரஜினி
கோலாலம்பூர்:
""அமைதியை நோக்கிப் போகும்படி என்னைக் கடவுள் கூறியுள்ளார். யார் கண்டது? அது அரசியலாகக் கூடஇருக்கலாம். கடவுளின் விதிப்படி என்ன நடக்குமோ அது தான் நடக்கும்"" என்று மலேசியாவில் நடந்த நட்சத்திரக்கலைவிழாவின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்காகவும் நலிந்து போன திரைப்படக் கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும்தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்-நடிகைகள் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களாகக் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியின் போது விழாவிற்கு வந்திருந்த 20 ரசிகர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள்ரஜினியிடமும் கமலஹாசனிடமும் எந்தக் கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து ரசிகர்கள் அவர்கள் இருவரிடமும் அரசியல் முதல் ஆன்மிகம் வரை பலவிதமான கேள்விகளையும்கேட்டு துளைத்து எடுத்து விட்டனர்.
அப்போது ரசிகர்ளின் கேள்விகளுக்கு ரஜினி அளித்த பதில்களின் விவரம்:
நான் அமைதியாக இருப்பதற்குக் காரணங்கள் பல உள்ளன. என்ன காரணம் என்று நீங்களும் கேட்கலாம்.
எனக்கு அமைதி தேவைப்படுகிறது. அமைதியை நாடிப் போகச் சொல்லி கடவுள் கூறியுள்ளார். யார் கண்டது? அதுஅரசியலாகக் கூட இருக்கலாம்.
கடவுளின் விதிப்படி என்ன நடக்குமோ அது கட்டாயம் நடக்கும். நடிகராக இருப்பதை விட ஆன்மிகவாதியாகஇருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டம்.
ஆனால் வாழ்க்கையில் சேலஞ்ச் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆன்மிகவாதியாக இருப்பதையே நான்விரும்புகிறேன்.
சினிமாவில் ஒரு வில்லனாகத் தான் நான் அறிமுகமானேன். வில்லனாகவே என் வாழ்க்கை தொடரும் என்றுநினைத்தேன். ஆனால் ஒரு புள்ளியில் என் வாழ்க்கை மாறியது.
ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தேன்.இப்போது அவ்வாறு நடிப்பதற்குத் தான் மிகவும் சிரமமாக இருக்கிறது.
நடிக்க வந்திருக்காவிட்டால் ஆரம்பத்தில் பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் தொழிலையே தொடர்ந்திருப்பேன்.தற்போது டிராபிக் கண்ட்ரோலராகக் கூட மாறியிருப்பேன். கண்டக்டராகவே இருந்திருந்தால் எனக்கு நிறையநிம்மதி கிடைத்திருக்கும்.
கடந்த 26 ஆண்டுகளாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்கள்நடிப்பதைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
இளைஞர்களும் என்னுடைய ரசிகர்களும் தொடர்ந்து தியானம் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.தியானம் செய்தால் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம் என்றார் ரஜினிகாந்த்.
கமலின் பதில்கள்:
இதற்கிடையே கமலிடம் சராமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு அவர் அளித்த பதில்களின்விவரம்:
"களத்தூர் கண்ணம்மா" முதல் "பஞ்சதந்திரம்" வரை நடித்த என்னுடைய உண்மையா தந்திரம் என்னவென்றுகேட்கிறீர்கள்.
தந்திரம், மந்திரம் எல்லாமே ரசிகர்கள் தான். என்னுடைய ரசிகர்களுக்குப் பிடித்ததைத் தான் செய்துகொண்டிருக்கிறேன். அதுவே எனக்கும் போதுமானது.
சில சமயம் அந்த ரசிகர்கள் கையாளும் தந்திரம் என்ன என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாமல் நாங்கள்தவித்து விடுகிறோம்.
இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற நல்ல வாத்தியார்கள் இருந்ததால் தான் எங்களால்நல்ல திறமைசாலிகளாக இருக்க முடிந்தது.
திறமை தான் சினிமாவில் முக்கியம். அழகு முக்கியமில்லை. நான் என்ன அழகாகவா இருக்கிறேன்? ("நீங்கள்அழகன் தான்" என்று அரங்கம் முழுவதிலுமிருந்து அப்போது குரல்கள் வந்தன)
அமெரிக்காவில் தான் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அது கிடைக்காததால் நாங்கள்வருத்தமடைந்து விடுவதில்லை. அவர்கள் யார் நமது தமிழ்ப் படங்களின் திறமைகளை மதிப்பிடுவதற்கு?
இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொரு தமிழ் ரசிகனும் தான் தமிழ்ப் படத்தின் தரத்தை நிர்ணயிக்கும் தலைமை நீதிபதிகள்என்றார் கமலஹாசன்.
பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க "கடவுள் பாதி மிருகம் பாதி..." என்ற "ஆளவந்தான்" பாடலைப் பாடிரசிகர்களின் கைத்தட்டலைப் பெற்றார்.
முன்னதாக தமிழ் நடிகர்-நடிகைகளுக்கு மலேசியா அமைச்சர் டத்தோ சாமிவேலு விருந்து அளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications