மதுரை: வக்கீல்கள் செய்யும் முத்திரைத் தாள் மோசடி
மதுரை:
மதுரையில் வக்கீல்களே போலி முத்திரைத் தாள்களைப் பயன்படுத்தி பல கிரிமினல்களை விடுதலை செய்யவைத்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
போலி முத்திரைத் தாள்களை அச்சிடுவது, விற்பது, வாங்குவது ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பற்றிபொதுமக்களே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நேற்று தான் தமிழக அரசு அறிவித்தது.
இதன் எதிரொலியாக மதுரை போலீசார் இது தொடர்பாக தங்கள் முதல் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்திலேயே அவர்கள் மதுரையில் உள்ள வக்கீல்களை நோக்கி தங்கள் பார்வையைத்திருப்பியுள்ளனர்.
போலி முத்திரைத் தாள்களைப் பயன்படுத்தி உத்தரவாதப் பத்திரங்களைக் (ஷ்யூரிட்டி) கொண்டு வரும்குற்றவாளிகளை வக்கீல்கள் விடுவித்து வருவதாகப் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மதுரையில் உள்ள பல முத்திரைத் தாள் வியாபாரிகள்போலியாக முத்திரைத் தாள்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.
மேலும் இந்த முத்திரைத் தாள்களில் பயன்படுத்தப்படும் வருவாய்த் துறை அலுவலகங்களின் ரப்பர் ஸ்டாம்ப்சீல்களையும் இந்த வியாபாரிகளே தயாரித்து வைத்துள்ள விவரமும் தெரிய வந்துள்ளது.
இந்த போலி முத்திரைத் தாள்களில் எழுதப்படும் உத்தரவாதப் பத்திரங்களை உண்மையானதாகக் காட்டிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பல குற்றவாளிகளை விடுவித்த சம்பவங்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இவ்வாறு பல கிரிமினல் குற்றவாளிகள் கூட விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் போலீசார் ஏராளமான போலி முத்திரைத் தாள்களையும் போலி ரப்பர்ஸ்டாம்ப்புகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த போலி முத்திரைத் தாள்கள் விற்பனைக்கு மதுரையைச் சேர்ந்த 21 வக்கீல்களும் கூட உடந்தையாக இருந்தனர்என்ற விவரமும் போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வக்கீல்கள் பயன்படுத்தும் முத்திரைத் தாள்களை சோதனையிட அனுமதிக்குமாறு கோரி மதுரைமாநகர முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications