வாகனம் வைத்திருப்பவர்களே!
சென்னை:
வாகனங்களில் நம்பர் பிளேட்டை மாற்றுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது.
சொந்த உபயோகத்திற்காக வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதனுடைய நம்பர் பிளேட்டை வெள்ளை நிறப்பின்னணியில் கறுப்பு நிறத்தில் நம்பர் எழுதியிருக்குமாறு மாற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்அறிவிக்கப்பட்டது.
மேலும் வாடகை வாகனங்களை வைத்திருப்பவர்கள் மஞ்சள் நிறப் பின்னணியில் கறுப்பு நிறத்தில் நம்பரைஎழுதியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 1ம் தேதிக்கு முன் இந்த நம்பர் பிளேட் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாகனஉரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல வாகன உரிமையாளர்கள் தங்களுடைய நம்பர் பிளேட்டுகளில் உள்ள நம்பர்களை பெயின்ட்டில்எழுதுவதற்குப் பதிலாக கறுப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர்.
ஆனால் ஸ்டிக்கர் ஒட்டினால் செல்லாது என்றும் நம்பர்களை பெயின்ட்டில் தான் எழுத வேண்டும் என்று தமிழகஅரசு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இதற்காக ஜூலை 31ம் தேதி வரை காலக்கெடுவையும்அரசு நிர்ணயித்தது.
இதையடுத்து ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்த பல வாகன உரிமையாளர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.முதலிலேயே ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்று அறிவித்திருக்கலாமே என்று புலம்பினர்.
இருந்தாலும் அதன் பின்னர் ஏராளமானவர்கள் தங்கள் நம்பர் பிளேட்டுகளிலிருந்த ஸ்டிக்கர்களை எடுத்துவிட்டுபெயின்ட்டுகளை வைத்தே நம்பரை எழுதினர்.
இந்நிலையில் இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. நம்பர் பிளேட்டை மாற்றாத வாகன உரிமையாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து பெயின்ட்டர்களின் கடைகளிலும் வீடுகளிலும் கடந்த சில நாட்களாக கூட்டம் அலை மோதுகிறது.
வரும் கூட்டத்தை ஏராளமான பெயின்ட்டர்களும் "நன்றாகப்" பயன்படுத்திக் கொண்டு நம்பர் பிளேட்டுகளில்பெயின்ட் அடிப்பதற்காக வழக்கத்தை விடக் கூடுதலான கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
இதற்கிடையே நம்பர் பிளேட்டை மாற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications