மதுரை காமராஜர் பல்கலையில் ராகிங்: 6 எம்.சி.ஏ. மாணவிகள் விடுதியிலிருந்து நீக்கம்
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் முதலாண்டு மாணவிகளை ராகிங் செய்த 6 எம்.சி.ஏ.மாணவிகளை விடுதியிலிருந்து நீக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்காக மல்லிகை, முல்லை மற்றும் தாமரை ஆகிய மூன்றுவிடுதிகள் உள்ளன.
இவற்றில் ஒரு விடுதியில் பெரும்பாலும் எம்.சி.ஏ. மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இவர்களில் 2வது ஆண்டு படிக்கும் ஆறு எம்.சி.ஏ. மாணவிகள் சமீபத்தில் புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டுஎம்.சி.ஏ. படிக்கும் சில மாணவிகளை ஒரு அறைக்குள் போட்டு பூட்டி வைத்து ராகிங் செய்தனர்.
நீண்ட நேரமாக அறைக்குள் பூட்டி வைத்த பின்னரே தங்கள் ஜூனியர்கள் அந்த 2வது ஆண்டு எம்.சி.ஏ.மாணவிகள் திறந்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவிகள் விடுதி வார்டன் மற்றும் பல்கலைக்கழகப்பதிவாளர் ஆகியோரிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.ராகிங் செய்த ஆறு மாணவிகளின் பெற்றோர்களும் பல்கலைக்கழகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைநடத்தப்பட்டது.
விசாரணையின் போது அந்த ஆறு மாணவிகளும் தங்களுடைய தவறை ஒப்புக் கொண்டு ராகிங் செய்ததற்காகவருத்தமும் தெரிவித்தனர். மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து அந்த ஆறு மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் அவர்களைவிடுதியிலிருந்து மட்டும் நீக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ராகிங் செய்த அந்த ஆறு மாணவிகளும் விடுதியை விட்டு வெளியேறினர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications