திருச்சி ராகிங் கொலை: 3 கூலிப்படையினர் கைது
திருச்சி:
திருச்சியில் கடந்த வாரம் ராகிங்கைக் கண்டித்த கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 3பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நகரில் உள்ள ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரியில் ராகிங்கை தட்டிக் கேட்ட அழகர்சாமி என்ற கல்லூரிமாணவர் கடந்த 24ம் தேதி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பிரதீப், ஆனந்தகுமார் மற்றும்ஆறுமுகம் ஆகிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களுடன் சில கூலிப் படையினரும் சேர்ந்து கொண்டு தான் அழகர்சாமியைக் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இதையடுத்து இந்தக் கூலிப் படையினரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதையடுத்து பல திருட்டு வழக்குகளில் தண்டனை பெற்ற கூலிப் படையைச் சேர்ந்த சுரேஷ் (22) என்பவனைப்போலீசார் கைது செய்தனர்.
இவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவனுடைய நண்பர்களான பிரதாப் (20) மற்றும் இப்ராஹிம் (19)ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். காஜாமலை மத்திய தானியக் கிடங்குப் பகுதியில் ஒளிந்துகொண்டிருந்த இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த இந்தக் கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவன் செல்வகுமார் என்பவன்ஏற்கனவே தலைமறைவாகி விட்டான். அவனைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications