வறண்டு கொண்டிருக்கும் சென்னை ஏரிகள்: மழை காலத்திலும் குடிநீர் பஞ்ச அபாயம்
சென்னை:
சென்னை ஏரிகள் வரண்டு வருவதால் நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வது கடினமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகருக்கு ஐந்து பெரிய ஏரிகள் மூலம் தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. செம்பரம்பாக்கம், புழல், செங்குன்றம், சோழவரம், பூண்டி ஆகிய இந்த ஏரிகள் தான் சென்னை குடிநீர் விநியோக ஆதாரமாக உள்ளன.
ஆனால் இவற்றில் தற்போதைய நீர் இருப்பு மிகவும் கவலை அளிக்கும்படி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே மாதத்தில், இந்த ஐந்து ஏரிகளிலும் 34 கோடியே 70 லட்சத்து கன அடி நீர் இருப்பு இருந்தது. ஆனால் இப்போதோ, 28 கோடியே 70 லட்சத்து கன அடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது.
எனவே நகருக்கு சிக்கல் இல்லாமல் குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்படலாம் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பருவ மழை வழக்கமாக ஜூலை முதல் வாரத்திலேயே தொடங்கி விடும். ஆனால் ஆகஸ்ட் மாதம் பிறந்தும் இதுவரை நல்ல மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான தூறல் போடுவதோடு வானம் அமைதியாகி விடுகிறது.
சரியான மழை இல்லாததால் ஏரிகள் தொடர்ந்து வறண்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் மழை காலத்திலும் கூட சென்னை நகரில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications