நெசவாளர்களுடன் கஞ்சி அருந்தப் போகும் கருணாநிதி
சென்னை:
நெசவுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து கஞ்சி அருந்தி போராட்டம் நடத்த திமுக தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் வேலையில்லாமல் வாடி வரும் நெசவுத் தொழிலாளர்களுக்கு பொது மக்கள் கஞ்சித் தொட்டிகள் அமைத்து உணவுவழங்கி வருகின்றனர். இது போன்ற கஞ்சித் தொட்டிகளை அமைக்க திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கஞ்சித் தொட்டிகள் அமைத்துள்ளனர். ஆனால், இதற்குப் போட்டியாக பிரியாணிதருகிறோம் என்று சொல்லி நெசவாளர்களின் பட்டினியை கேலிக்குறியதாக்கி வருகின்றனர் சில அதிமுகவினர்.
இந் நிலையில் இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களின் பசி, பஞ்சக் குமுறல்களைக் கேட்டு கோபப்படுபவர்கள் தான் இன்று ஆட்சியாளர்களாக உட்கார்ந்து கொண்டுள்ளார்கள். பட்டினிகிடக்கும் தொழிலாளர்களுக்கு திமுக கஞ்சி வழங்கினால், பிரியாணி வழங்குவதாக அதிமுக கூறுகிறது. திமுகவால் கஞ்சி தான் வழங்கமுடியும்.
ஆனால், இப்படி போட்டி போட்டுக் கொண்டு நெசவாளர்களுக்கு பொன்னும் பொருளும் கிடைத்தால் அது எனக்கு மகிழ்ச்சி தான்.
நெசவாளர்கள் சந்தித்து வரும் பசிக் கொடுமையை ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்ல நானே அம்பையார்குப்பத்திற்குச் சென்று அங்குநெசவாளர்களுடன் சேர்ந்து கஞ்சி அருந்த உள்ளேன் என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications