கண்ணப்பன் குறித்து "செஞ்சி"யிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்டார் அத்வானி
டெல்லி:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கண்ணப்பன் பேசியது தொடர்பாக மற்றொரு மதிமுக அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணைப் பிரதமர் அத்வானி விளக்கம் கேட்டார்.
புலிகளுக்கு ஆதரவாகக் கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருவதால் அவரை மத்திய அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் நகல் அத்வானிக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் செஞ்சி ராமச்சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அத்வானி, "அங்கு என்ன தான் நடக்கிறது? கண்ணப்பனைப் பற்றி ஜெயலலிதா எங்களுக்குக் கடிதம் எழுத என்ன காரணம்? கண்ணப்பன் புலிகளை ஆதரித்துப் பேசினாரா?" என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த செஞ்சி ராமச்சந்திரன், "பொதுக் கூட்டத்திலும் நிருபர்கள் கூட்டத்திலும் கட்சியின் நிலைப்பாட்டைத் தான் கூறியிருப்பார். ஆனால் மத்திய அரசுக்குத் தர்ம சங்கடம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் கண்ணப்பன் பேசியிருக்க மாட்டார். அவரைச் சந்தித்து பேசி நான் உங்களுக்கு முழு விவரங்களையும் கூறுகிறேன்" என்றார்.
"இது போன்ற சூழ்நிலையில் ஏன் நிருபர்களையெல்லாம் சந்திக்கிறீர்கள்? தவிர்த்து விடலாமே" என்று அப்போது செஞ்சி ராமச்சந்திரனிடம் அத்வானி அறிவுரை கூறினார்.
இதற்கிடையே ஜெயலலிதா அனுப்பிய கடிதம் தொடர்பாக கண்ணப்பனிடமும் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications