ஆற்காடு வீராசாமி வழக்கு: ஜெ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
"பவர் ஆப் அட்டர்னி" மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் மீது அவதூறு வழக்கு தொடர முடியாது என்று முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் வீட்டில் நடந்த தாக்குதலைக் கண்டித்து வீராசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
வீராசாமியின் இந்த அறிக்கையைக் கண்டித்து அவருக்கு எதிராக சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் "பவர் ஆப் அட்டர்னி"யான வழக்கறிஞர் வி.எஸ். சேதுராமன் மூலம் இந்த வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் "பவர் ஆப் அட்டர்னி" மூலம் தன் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர அதிகாரம் இல்லை என்று அதே கோர்ட்டில் வீராசாமி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக வீராசாமி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வீராசாமி மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஜி.பி. பட்நாயக் மற்றும் நீதிபதி ரூமாபால் ஆகியோர் இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications