ஆசிரியையிடம் லஞ்சம் கேட்ட 3 கல்வித்துறை அதிகாரிகள் கைது
திருச்சி:
தாற்காலிக பதவியில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம் கேட்ட 3 கல்வி அதிகாரிகளும், பியூன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது வீட்டிலும் போலீசார் ரெய்ட் நடத்தினர்.
திருச்சியை அடுத்துள்ள திருவெறம்பூரில் பாய்லர் ஆலையின் பள்ளியில் தாற்காலிகமாக ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஞானச்செல்வி. நீண்டகாலமாக தாற்காலிகப் பணியில் இருந்ததால் தன்னை நிரந்தர ஊழியராகக் கோரி திருச்சி கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக தங்களை நேரில் சந்திக்கும்படி திருச்சி மாவட்டக் கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு ஞானச்செல்வி சென்றார். அப்போது அவரிடம் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமானால் ரூ. 7,000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறப்பட்டது.
லஞ்சம் கொடுத்து தனக்கு பதவி நிரந்தரம் வாங்குவதை விரும்பாத அந்த ஆசிரியை உடனடியாக இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் தந்தார்.
இதையடுத்து போலீசார் கூறியபடி ரூ. 7,000த்துடன் நேற்று திருச்சி கல்வித்துறை அலுவலகம் சென்றார். அங்கு கல்வி அதிகாரி சுப.வள்ளியப்பனைச் சந்தித்து பணத்தைக் கொடுத்தார். உடனே மறைந்திருந்த போலீசார் உள்ளே நுழைந்து வள்ளியப்பனை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இந்த லஞ்சத்தை பங்கு போட திட்டமிட்டிருந்த வள்ளியப்பனின் உதவியாளர் மற்றும் வரதராஜன், கோமதி என்ற 2 கல்வித்துறை கண்காணிப்பாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவுடன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தார் வள்ளியப்பன். கைதான பெண் அதிகாரியான கோமதி தனது முகத்தை புடவையால் மூடியபடி அழுதுகொண்டே வந்து போலீஸ் ஜீப்பில் ஏறினார்.
இதையடுத்து இந்த நால்வரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர். சோதனையில் என்ன சிக்கியது என்று தெரியவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications