சசிகலாவுடன் இன்று ஹைதராபாத் செல்கிறார் ஜெ.
சென்னை:
ஓய்வெடுப்பதற்காக தன் தோழி சசிகலாவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹைதராபாத் செல்கிறார்.
ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று ஓய்வெடுக்கும் ஜெயலலிதா அங்கிருந்தே சில அதிரடிநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் 11ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இம்மாதம் 1ம் தேதி தமிழர் தேசிய இயக்கத்தலைவர் நெடுமாறன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட கைதுநடவடிக்கையை ஹைதராபத்திலிருந்தே ஜெயலலிதா மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனைக் கைது செய்தால் அவர் மிகவும் பிரபலமாகிவிடுவார் என்பதால் அதைத் தற்போதைக்கு ஒத்தி வைத்து விட்டு பாமக நிறுவனர் ராமதாஸை "பொடா"வின் கீழ்கைது செய்வது குறித்து ஜெயலலிதா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
இதற்கிடையே மேம்பால ஊழல் குறித்த விசாரணைகளும் கிட்டத்தட்ட முழுவதுமாக முடிவடைந்து விட்ட நிலையில்திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் உள்ளிட்ட பலருடைய கைதுகளும்விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்திலிருந்து ஜெயலலிதாவின் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்காக சென்னையில் அதிகாரிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கருணாநிதி தன் குடும்பத்தினருடன் நேற்று தான் பெங்களூருக்கு ஓய்வெடுப்பதற்காகச் சென்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ஜெயலலிதாவின் ஹைதராபாத் பயணம் இம்முறை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications