துணை ஜனாதிபதி தேர்தல்: வைகோ டெல்லி செல்ல அனுமதி
சென்னை:
துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லி செல்ல சென்னைஉயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற எம்.பிக்கள் மட்டுமே இதில்வாக்களிக்க முடியும்.
0இந்நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகாசிஎம்.பியுமான வைகோ துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து என்னுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே தீருவேன் என்றும்அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
இதற்காக வைகோ டெல்லி செல்வதற்கு அனுமதி கோரி அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று காலை நீதிபதி கனகராஜ் விசாரித்தார். வைகோவின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில்,
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம். ஆனால்வைகோ அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.
எனவே அவரை டெல்லி சென்று வாக்களிப்பதற்காக அனுமதிக்க வேண்டும்.
வரும் 12ம் தேதி காலையில் அவர் டெல்லி சென்று வாக்களித்து விட்டு அன்று மாலையிலேயே மீண்டும் சிறைக்குத்திரும்பி விடுவார் என்று வைகோவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்கு அரசுத் தரப்பிலிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து இம்மனுவின் தீர்ப்புஇன்று மாலை வழங்கப்படும் என்று நீதிபதி கனகராஜ் தெரிவித்தார்.
அதன்படி இன்று மாலை நீதிபதி கனகராஜ் தீர்ப்பு வழங்கினார். வரும் 12ம் தேதி காலையில் டெல்லிக்குவிமானத்தில் சென்று துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து விட்டு அன்று மாலையே வைகோ திரும்பவேண்டும் என்றும் இதற்கு தமிழக போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications